ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு.. இனி இதை மட்டுமே வழங்க வேண்டும்.. தமிழக அரசு அதிரடி.. மக்கள் நிம்மதி
ரேஷன் கடைகளுக்கு அடுத்த உத்தரவை கூட்டுறவு துறை பிறப்பித்துள்ளது
சென்னை: தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும், ரேஷன் கடையில் தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் வினியோகம் செய்யக் கூடாது என்றும் கூட்டுறவுத் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட் பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன..
இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பல பலன்களை பெற்று வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் தொடர்ந்து காக்கப்பட்டு வருகின்றன..

திடீர் ஆய்வுகள்
அத்துடன் பண்டிகைக் காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரணப் பொருட்கள் போன்ற அனைத்துமே, ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கின்றன..

சிதறிய பொருட்கள்
எனினும், குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்தன. இந்த புகார்களுக்கும் ஒரு முடிவை கட்டியது தமிழக அரசு.. அதன்படி, பொருட்கள் தரமில்லாமல் இருக்கும் பட்சத்தில் அதை திரும்பி அனுப்பலாம் என்று அறிவித்திருந்தது... இப்போது இன்னொரு சிறப்பு அறிவிப்பையும் வெளியிட்டள்ளது.. ரேஷன் கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை, மறுபடியும் வினியோகம் செய்யக் கூடாது என்று ரேஷன் ஊழியர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது..

அரிசி தரமானதா?
நியாய விலை கடைகள் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்றும், தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, கிடங்குகளில் அரிசி தரமாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது கூட்டுறவுத்துறை.

புது உத்தரவு
மேலும், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்களை, குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் வினியோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும் என்பதுடன், இவற்றை நியாய விலை கடை ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது... இந்த புது உத்தரவானது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications