பம்முகிறாரா "பழனி".. அதைவிடுங்க.. அதிமுக மேல டெல்லிக்கு ஆசை.. ஜஸ்ட் 2 நாள்தான்.. சொல்றது யார் பாருங்க
அண்ணாமலையின் பதவி 2 நாளில் காலியாகிவிடும் என்று நாஞ்சில் சம்பத் ஆரூடம் தெரிவித்துள்ளார்
சென்னை: அதிமுக கூட்டணியை பாஜக மேலிடம் விரும்பும் நிலையில், அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற அண்ணாமலையை ஏற்க எடப்பாடி தரப்பு தயாராக இல்லையென நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி உடைகிறதா? என்ற சந்தேகங்கள் வலுத்து வரும்நிலையில்தான், திடீரென நேற்றைய தினமும் சில பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.. மேலும் பலர் இணைய போவதாக கூறுகிறார்கள்.
அதிமுக-பாஜக இடையே நிலவி வரும் வார்த்தை போர் தமிழக அரசியலின் பேசுபொருளாக மாறியுள்ளது. கூட்டணி கட்சியினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறைசொல்வது அந்த கூட்டணி முறிவுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது.

சேலஞ்ச்கள்
மேலும், பாஜகவில் இருந்து விலகி பல நிர்வாகிகள் அதிமுகவில் இணைவதுடன், அனைவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து குற்றம் சாட்டியும் வருகிறார்கள்.. ஆனால், கட்சியில் இருந்து பழையவர்கள் போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அடுத்த தலைவர்கள் உருவாகுவார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பேட்டிகளை தந்து வருகிறார்.. அதுமட்டுமல்லாமல், திராவிட கட்சிகளை சார்ந்துதான் பாஜக வளரும் என்று குற்றச்சாட்டு இருந்தது.. ஆனால், இன்று பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலைமை உருவாகி உள்ளதாக கூறியுள்ளார்.

நாஞ்சில் சம்பத்
அத்துடன், "தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை தலைவராக வந்திருக்கேன்.. ஜெயலலிதா, கருணாநிதி போல் முடிவு எடுப்பேன் என்றும் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.. இந்த நிலையில் அண்ணாமலையில் பேச்சுக்கு, மூத்த அரசியல்வாதியும், திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பதிலளித்துள்ளார்.. "பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்க வாய்ப்பில்லை.. அண்ணாமலை அடாவடித்தனமாகப் பேசி வருகிறார்.. அழிவின் விளிம்பை நோக்கி அண்ணாமலை சென்று கொண்டிருக்கிறார்.. அதைதான் அவருடைய பேச்சு உணர்த்துகிறது..

காலசுழற்சி
எந்த தலைவரும் தன்னை தலைவர் என்று சொல்லிக்கொள்வதில்லை. அவரை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து பாஜகவிற்குள்ளேயே எழுந்துள்ளது. அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற அவரை ஏற்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராக இல்லை. இன்னும் 2 நாட்களில் பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்க வாய்ப்பில்லை... அதிமுகவுடனான கூட்டணியை டெல்லி விரும்புகிறது என்று நாஞ்சில் சம்பத் ஆரூடம் கூறியுள்ளார்.

ஐடி விங்
இதனிடையே, மாஜி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஜகவுடனான மோதல் போக்கு குறித்து பதிலளித்தார்.. அப்போது, "எடப்பாடி பழனிசாமியின் போட்டோக்களை எரித்தது கண்டனத்திற்குரியதுதான்.. ஆனால், இதை பற்றியெல்லாம் நேற்றே பேசிவிட்டோம். இதுபோல் எதிர்காலத்தில் இருக்காது என்று நம்புகிறேன். பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை... ஐடி விங் தரப்பில் சில பக்குவப்படாத கருத்துகள் பகிரப்பட்டது. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்தே வருகிறது. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணி. இது தொடரும். கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை" என்றார்.

பம்முதா
வழக்கமாக, பேட்டிகளின்போது, காட்டமாகவும், காரசாரமாகவும் கருத்துக்களை முன்வைக்கும் ஜெயக்குமார். கடந்த 2 நாட்களாகவே, பட்டும்படாமல்தான் பாஜகவை பேசி வருகிறாராம்.. அதிமுக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமில் ஈர்க்கப்பட்டுத்தான் பாஜகவில் இருந்து ஒவ்வொரு நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள் என்று ஜெயக்குமார் காரணம் சொன்னாரே தவிர, எதிர்வினையாற்றுவோம் என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலரடி தரவில்லையே? அதிமுக ஏன் பம்முகிறது? என்றெல்லாம் கேள்விகள் எழ துவங்கியது.. ஆனால், இப்போது, அதிமுக - பாஜகவுக்குள் எந்தமோதலும் இல்லை என்று பளிச்சுன்னு சொல்லி உள்ளது, பல யூகங்களை கிளப்பி விட்டுவருகிறது.












Click it and Unblock the Notifications