கிரேட் எஸ்கேப் விஜய் 31 இடங்களில்.. வெற்றியைத் தூக்கிய 77 இடங்கள்.. வெளியான தவெக அதிர்ச்சி டேட்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் அதிரடி காட்டியுள்ளது. இதில் 77 தொகுதிகளில் 10,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தவெக வென்றுள்ளது அந்த கட்சியின் பலத்தை கன்பார்ம் செய்துள்ளது.அதேசமயம், 31 தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கிடைத்துள்ள வெற்றி தவெகவுக்கு புதிய சவால்களையும் முன்வைத்துள்ளது.. அதைப்பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெற்றுள்ள வாக்கு வித்தியாசம் (Victory Margins) குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் இப்போது வெளியாகியுள்ளன. GenAI Data Analytics விஜயானந்த், இந்த டேட்டாவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.. அந்த டேட்டாவில்தான், அக்கட்சியின் கள பலம் மற்றும் சவால்களை துல்லியமாக அறிய முடிகிறது.

TVK Victory

75,000 முதல் 1 லட்சம் வரை மெகா வெற்றி

விஜயானந்த் வழங்கிய தரவுகளின்படி, தவெக வேட்பாளர்கள் பல தொகுதிகளில் பிரம்மாண்டமான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, 75,001 முதல் 1,00,000 வாக்குகள் என்ற இமாலய வித்தியாசத்தில் 3 தொகுதிகளில் தவெக வென்றுள்ளது.

அதேபோல், 50,001 முதல் 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் 10 தொகுதிகளைத் தவெக கைப்பற்றியுள்ளது. ஒரு புதிய கட்சி, தனது முதல் தேர்தலிலேயே ஒரு லட்சம் வாக்குகள் நெருக்கத்தில் வெற்றி வித்தியாசத்தைப் பெறுவது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

10,000 முதல் 50,000 வரை வலுவான வாக்கு வங்கி

தவெக வென்றுள்ள மொத்த இடங்களில் பெரும்பாலானவை 10,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் கிடைத்துள்ளன. 10,001 முதல் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிகபட்சமாக 34 தொகுதிகளிலும், 20,001 முதல் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் 30 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மொத்தம் 77 தொகுதிகளில் அதாவது 34+30+10+3 என்ற அடிப்படையில், தவெக 10,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது உறுதியாகிறது.

இது அந்தப் பகுதிகளில் அக்கட்சிக்கான நிலையான மற்றும் பலமான வாக்கு வங்கி இருப்பதற்கான நேரடிச் சான்றாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம்.

கிரேட் எஸ்கேப் 31 தொகுதிகள்

இந்த மெகா வெற்றிகளுக்கு மத்தியில், சில தொகுதிகளில் தவெக நூலிழையில் வெற்றியை எட்டியுள்ளது. 1,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 5 தொகுதிகளிலும், 1,001 முதல் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் 14 தொகுதிகளிலும் தவெக வென்றுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் போன்ற இடங்களில் வெற்றி வித்தியாசம் மிகவும் ஒற்றை இலக்க எண்களில் இருந்ததாகத் தெரிகிறது.

மேலும் 5,001 முதல் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் 12 தொகுதிகள் கிடைத்துள்ளன. 10,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மொத்தம் 31 தொகுதிகளைத் தவெக கைப்பற்றியுள்ளது. இந்தப் பகுதிகளில் போட்டி மிகக் கடுமையாக இருந்ததை இந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

இழுபறியும் எதிர்பாராத ட்விஸ்ட்களும்

இந்தத் தரவுகள் மூலம் அந்தப் பகுதிகளில் போட்டி மிகக் கடுமையாக இருந்ததும், கடைசி நிமிடம் வரை இழுபறி நீடித்ததும் தெரியவந்துள்ளது.

35 சதவீத வாக்கு சதவீதத்தை தவெக எட்டியிருந்தாலும், இந்த 31 தொகுதிகளைப் பொறுத்தவரை, சின்ன வாக்கு மாற்றங்கள் கூட முடிவை முழுமையாக மாற்றியிருக்கக்கூடும். தவெக வென்ற 108 இடங்களில் 77 தொகுதிகளில் 10,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசம் இருப்பது முக்கியமான விஷயமாகும்.

அடுத்தகட்ட நகர்வு என்ன?

ஆனால், புதுசா தொடங்கப்பட்ட ஒரு கட்சி, பழைய அரசியல் கோட்டைகளில் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெல்வது அந்தப் பகுதிகளில் மக்கள் மாற்றத்தை விரும்பியதையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, விஜய் மக்கள் இயக்கத்தின் பல ஆண்டுகால நற்பணித் திட்டங்களும், பூத் அளவிலான கட்டமைப்பும் இந்த வெற்றிகளுக்குக் காரணமாக இருந்துள்ளதை நாம் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

எனினும் 10,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ள 31 தொகுதிகள் தவெகவிற்குச் சவாலான இடங்களாகும். இதில், 1,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்கள் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடியவை.

வரும் காலங்களில் இந்த நெருக்கமான போட்டி நிலவும் தொகுதிகளில் தனது பிடியை வலுப்படுத்துவதில்தான் தவெக-வின் எதிர்கால வளர்ச்சி அடங்கியுள்ளது. மாஸ் வெற்றிகளைத் தாண்டி, இந்தச் சிறிய இடைவெளிகளைச் சரி செய்வதே விஜய் கட்சியின் அடுத்தகட்ட நகர்வாக இருக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+