காலத்தின் கட்டாயம்.. புதிய ஆட்சி அமைய உடனே ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஸ்டாலின்
சென்னை: புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம். எனவே உடனடியாக புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது.108 இடங்களை தவெக வென்றது. தனி மெஜாரிட்டி கிடைக்காத போதிலும் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணை காட்டினால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பேன் என்று ஆளுநர் ஆர்லேகர் கூறினார். ஆளுநரின் இந்த செயல் ஜனநாயக விரோதமானது என்று அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. ஆனால் இந்த விவாகரத்தில் பாதிக்கப்பட்ட விஜய் பலத்த மவுனமே காத்து வந்தார்.
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று தேசிய அளவில் எதிர்ப்பு கிளம்பின. இந்த சூழலில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் ஆளுநரின் செயலை கண்டித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார்.
இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
வன்னி அரசு வந்ததும் வராததுமா செய்த வேலை.. அரசு அதிகாரிகள் பங்கேற்ற தாட்கோ கூட்டத்தில் என்ன நடந்தது -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை












Click it and Unblock the Notifications