“திமுக கொண்டு வந்த நலத் திட்டங்கள் தொடர வேண்டும்".. தவெகவுக்கு இடதுசாரி கட்சிகள் போட்ட கண்டிஷன்!
சென்னை: "திமுக அரசு கொண்டு வந்த நலத் திட்டங்களை தமிழக வெற்றிக் கழகமும் தொடர வேண்டும்" என தவெக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ள இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், அந்த கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வந்தது.

திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் தவெகவுக்கு முதலில் ஆதரவுக் கரம் நீட்டியது. அந்த கட்சிக்கு 5 உறுப்பினர்கள் உள்ளனர். இருப்பினும், 6 உறுப்பினர்களின் ஆதரவு தவெகவுக்கு தேவைப்பட்டது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர்கள் தலா இரு உறுப்பினர்களை கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோரிடம் ஆதரவு கோரினர். இது தொடர்பாக 3 கட்சிகளும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தன.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது ஆதரவு கடிதங்களை அளித்துள்ளன. இதையடுத்து, தவெகவின் பலம் 116 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், "ஆளுநர் ஆட்சி நடைபெறுவதை தவிர்க்கவே தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம். தவெக ஆட்சி அமைக்க நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளோம் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம்.
விசிகவும் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நாங்கள் தவெகவுக்கு ஆதரவு மட்டுமே அளித்துள்ளோம். கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. மக்கள் தவெகவுக்கு பெரும்பான்மை அளித்துள்ளனர். அந்தத் தீர்ப்பை நாங்கள் வழிமொழிந்துள்ளோம்.
மக்கள் பிரச்சனைகளுக்காக திமுக உடன் சேர்ந்து பயணிப்போம்" எனத் தெரிவித்தனர்.
மேலும், திமுக அரசு கொண்டு வந்த நலத் திட்டங்களை தமிழக வெற்றிக் கழகமும் தொடர வேண்டும் என தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ள இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. திமுக அரசின் நலத் திட்டங்கள் தொடருமா என மக்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள இந்தக் கட்சிகள் திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications