அவசர அவசரமா "ஹெட் ஆபீஸில்".. கேப்பே விடாமல் அடித்தாடும் எடப்பாடி.. நாளும் குறிச்சாச்சு.. அப்டி போடு
சென்னை: அடுத்த லெவல் கட்டத்துக்கு அதிமுக நகர்ந்துள்ளது.. இதற்கான ஒரு பிளானை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார்.. இதை ஓபிஎஸ் தரப்பும் கவனித்து வருகிறது.
எம்பி தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.. . தங்கள் கட்சியை வலுப்படுத்துவது, கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பணிகளையும் சத்தமின்றி செய்து வருகின்றன.
இதில், திமுக மற்றும் அதிமுக அசுர வேகத்தில் களத்தில் இறங்கி உள்ளது.. அதன்படி, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பிறகு, அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறாராம்..

புது உத்தரவு: இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.. அதன் அடிப்படையில் ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூர் கழக கிளை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களிடம் விண்ணப்பங்களை பெற்று வீடு, வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி கொண்டிருக்கிறார்களாம்.
இதேபோல் திமுகவிலும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது... திமுகவில் ஏற்கனவே 1 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.
உறுப்பினர் சேர்க்கை: இதற்கு அடுத்தபடியாக, பூத் கமிட்டி அமைத்து கூடுதல் உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை திமுக தொடங்கி விட்டது.. இதற்காக நிர்வாகிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இதே போல் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கின்றன.. அதேபோல அதிமுகவும் கூட்டணி விவகாரத்தை லேசாக துவங்கி உள்ளது.. அதிமுக - பாஜக கூட்டணி தொடருவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தியிருந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடியும் கூறியிருந்தார்.
ராயப்பேட்டை ஆபிஸ்: ஆனால், நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, "மெகா கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெறும்" என்று கூறியிருந்தது பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது. இதனிடையே, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 20-ந்தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது... சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் 20-ந்தேதி மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது..
இந்த கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பூத் கமிட்டி அமைப்பது, கூடுதல் உறுப்பினர்களை சேர்ப்பது, முகவர்களை நியமிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மேலும், கர்நாடக தேர்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது... இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது..

தீர்மானங்கள்: 2 நாட்களுக்கு முன்பு நடந்த செயற்குழு கூட்டத்தில், அதிமுக மாநில மாநாடு மதுரையில் நடத்தப்போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அதேபோல, திமுகவுக்கு எதிரான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அடுத்த மா.செ.கூட்டம் பற்றின அறிவிப்பு வெளியாகி பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது... இதற்கு முன்பு இருந்ததைவிட, சமீப நாட்களாகவே, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வேகமெடுத்து வருகிறதாம்.. அத்துடன், ஒருபக்கம் பாஜக, மறுபக்கம் ஓபிஎஸ், தினகரன், இன்னொரு பக்கம் திமுக, இதற்கு நடுவில் கட்சியை நிர்வகிப்பது என நாலாபக்கமும் சுழன்று சுழன்று களமாடி வருவதை கண்டு, பலரும் திகைத்து போயுள்ளார்களாம் எதிர்தரப்பினர்..!!
-
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்?












Click it and Unblock the Notifications