சென்னையில் களமிறக்கப்பட்ட ஏஐ கேமரா.. இனி தப்பிக்க முடியாது! மாநகராட்சி முக்கிய முடிவு! நோட் பண்ணுங்க
சென்னை: சென்னையில் தெருவிற்கு தெரு தற்போது ஏஐ கேமரா கொண்டு வரப்பட உள்ளது. விதிகளை மீறி குப்பை கொட்டுவதை கண்காணிக்க இந்த கேமரா கொண்டு வரப்பட உள்ளது.
AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் சுகாதாரம் தொடர்பான விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.

விதிமீறி குப்பைகளை கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி டிஜிட்டல் முறையில் ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அபராதம்: சென்னை மாநகராட்சி நிர்வாகம் GCC ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதற்காக IOB இலிருந்து 468 PoS சாதனங்களைப் பெற்றுள்ளது. இதில் 70 ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு உள்ளது. செயல்படுத்தப்பட்ட சில நாட்களில் 289 பரிவர்த்தனைகள். 5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அபராதம் செய்யும் முறை வரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் பல்வேறு விதிகளை மீறும் குடியிருப்பாளர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் ஸ்பாட் பைன் முறையை கொண்டு வந்து உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன்.போடப்படும்
மாநகராட்சி நிர்வாகிகள் இதற்காக பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) கருவிகளைப் பயன்படுத்தி அபராதத் தொகையை வசூலிப்பார்கள். இந்த சாதனங்களைப் பயன்படுத்தி சொத்து வரி கூட வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சுமார் 500 பிஓஎஸ் கருவிகள் வாங்கப்பட்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, சாலை விதிகளை மீறும் போது போக்குவரத்து காவலர்கள் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது போல் பல்வேறு குடிமை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எப்படி அமல்படுத்தப்படும்: பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன்.போடப்படும்
இதற்காக UPI, டெபிட்/கிரெடிட் கார்டுகள், டிமாண்ட் டிராஃப்ட்கள் அல்லது காசோலைகள் மூலம் பணம் செலுத்தலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து GCC சாதனங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. இதனால் பைன் நேரடியாக மாநகராட்சிக்கு செல்லும். அதிகாரிகள் பணம் சுருட்ட வாய்ப்பு இல்லை. மாநகராட்சி வருவாயும் உயரும்.
வசூல்: விதிகளை மீறி குப்பை கொட்டியவர்களிடம் இருந்து இதுவரை ₹17.96 லட்சம் அபராதம் வசூலிப்பு: புதிய முன்னெடுப்பை கண்காணிக்க மண்டல வாரியாக குழுக்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இதை கண்காணிக்க மாநகராட்சி பாதுகாப்பு மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், மண்டல அதிகாரிகள், நிர்வாக மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் GCC இல் உள்ள வார்டு உதவி பொறியாளர்கள் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவார்கள். இது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் விதிகளை மீறுபவர்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும். இதற்காக 15 பறக்கும் படை வாகனங்கள் களமிறக்கப்படும். இந்த சாதனங்கள் இப்போது களமிறக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications