சென்னையின் தாழ்வான பகுதிகளுக்கு வந்திறங்கிய புத்தம் புதிய படகுகள்.. மாநகராட்சி நடவடிக்கை
சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையின் தாழ்வான பகுதிகளுக்கு பைபர் படகுகளை சென்னை மாநகராட்சி அனுப்பி வைக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. சென்னையின் தாழ்வான பகுதிகளான மடிப்பாக்கம், புழுதிவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் அதிகமாக தண்ணீர் தேங்கும் என்பதால், அந்த பகுதிகளுக்கு புதிய படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்ரா உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு தென்மேற்கு பருவ மழை தான் மழைக்காலம் ஆகும். ஆனால் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் அதிக மழை பெய்யும். இதில் குறிப்பாக தமிழ்நாடு அதிகப்படியான மழையை எதிர்கொள்ளும்.. அந்த வகையில் தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்யும். இதில் சென்னை மாநகரம் ஒவ்வொரு ஆண்டு மிகமிக அதிகளவு மழையை எதிர்கொள்ளும்.

சென்னை மட்டுமில்லாது தாம்பரம், ஆவடி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் அதிகளவு மழைபொழிவை பெறுவது வழக்கம். அந்த வகையில், விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாகவும், பருவமழை பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது. இதற்காக 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளதுடன், தங்கள் பகுதிகளுக்கு தேவையாக முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். நிவாரண முகாம்கள், குடிநீர் வசதி, ஜெனரேட்டர் வசதி, சமையல் கூடங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையான எந்திரங்கள், மோட்டார் பம்புகள், படகுகள் உள்ளிட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சென்னையில் 320 இடங்கள் தண்ணீர் தேக்கம் உள்ள இடங்களாக கண்டறியப்பட்டிருக்கிறது. அதிக மழைப்பொழிவு இருக்கும்போது இந்த இடங்களில் தண்ணீர் வழிந்தோட 3 நாட்கள் வரையில் ஆகிறது. சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், திருவொற்றியூர், மணலி, தாம்பரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் வழக்கமாக தண்ணீர் தேங்கும் இடங்களாக உள்ளது. அந்த பகுதிகளுக்கு படகுகளை அனுப்பி பொதுமக்கள் மீட்கப்படுகிறார்கள்.. அந்த வகையில், இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகளை சென்னை மாநகராட்சி தயார் நிலையில் வைக்க உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 36 பைபர் படகுகளை தயார் நிலையில் வைத்திருக்கிறது. நேற்று மாதவரம் மண்டலத்திற்கு ஒரு படகையும் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்கு 2 படகையும் அனுப்பியுள்ளனர். சென்னை வேளச்சேரி அடுத்த புழுதிவாக்கத்திற்கு புதிய படகுகள் வந்திறங்கி உள்ளன.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications