வீடு வீடாக.. கதவை தட்டிய மாநகராட்சி அதிகாரிகள்! வெள்ளம் வடிந்ததும் அதிரடி நடவடிக்கை! ரொம்ப முக்கியம்
சென்னை: சென்னையில் புயல் வெள்ளத்தை தொடர்ந்து மாநகராட்சி பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாநகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு வீடுகளாக சென்று கதவை தட்ட தொடங்கி உள்ளனர்.
பருவமழை. வெள்ளம் தொடர்பான நோய்களின் பரவலை எதிர்த்துப் போராடும் வகையில், தமிழ்நாடு அரசு 16,516 சிறப்பு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து 7.83 லட்சம் பேருக்கு நேற்று சிகிச்சை அளித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும், இதுவரை, 16,516 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில், இதுவரை இப்படி ஒரு மருத்துவ முகாம் நடத்தப்படவில்லை என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் முகாம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த மருத்துவ முகாம்களில், 7 லட்சத்து, 83 ஆயிரம், மேலும் 443 பேர் பயனடைந்துள்ளனர், என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் வைரஸ் நோய்கள் கட்டுக்குள் உள்ளது என்றார். மருத்துவ முகாம்கள் நடத்தி வருவதால், டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. இந்த ஆண்டு சிக்குன்குனியா, மலேரியா போன்றவையும் கட்டுக்குள் உள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அடையாறு ஆற்றங்கரையில் 7 தனியார் மருத்துவமனைகள் மருத்துவ முகாம்களில் இணைந்துள்ளது. ",மிக்ஜாம்' புயலைத் தொடர்ந்து, முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், ஏழு தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து, சைதாப்பேட்டை அடையாறு ஆற்றங்கரையோரங்களில் மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். இப்பகுதியில், சைதாப்பேட்டை அப்பாவு நகர் ராமச்சந்திரா கல்லூரி மற்றும் மருத்துவமனை அனைத்து மருந்துகள் மற்றும் தேவைகளுடன் கூடிய மருத்துவ முகாம்" என்றார் மா சுப்பிரமணியன்.
அதிகாரிகள் வருகை: சென்னையில் புயல் வெள்ளத்தை தொடர்ந்து மாநகராட்சி பல்வேறு சிறப்பு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாநகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு வீடுகளாக சென்று கதவை தட்ட தொடங்கி உள்ளனர். அதன்படி சென்னையில் தெரு தெருவாக.. வீடு வீடாக கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
கொசு மூலம் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் வைரஸ் நோய்கள் பரவாமல் தடுக்கும் விதமாக மாநகராட்சி அதிகாரிகள் கொசு மருந்து அடிக்கும் முகாமை தொடங்கி உள்ளனர்.
முக்கியமாக வெள்ளத்திற்குப் பிறகு கொசு உற்பத்தியைத் தடுக்க ஜி.சி.சி. துப்புரவு ஆய்வாளர்களின் மேற்பார்வையுடன், கொசு இனப்பெருக்கம் செய்யக்கூடிய பகுதிகளில் கொசு ஃபாகிங் அடிக்கப்பட்டு வருகிறது. கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களில் இந்த கொசு மருந்து அடிக்கப்படுகிறது.
கொசு மருந்து; அதோடு இல்லாமல் வீடு வீடாக அதிகாரிகள் கதவை தட்டி.. உங்கள் வீடுகளில் கொசு தொல்லை இருக்கிறதா என்பதை கேட்டு.. வீட்டிற்கு உள்ளே சென்று கூட கொசு மருந்தை அடித்து வருகின்றனர். நோய் பரவலை தடுக்கும் விதமாக அவர்கள் இந்த பணிகளை செய்து வருகின்றனர். .
சமீபத்தில் சென்னையை ஒட்டி கரையை கடந்த மிக்ஜாம் புயல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் என 4 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் இந்த வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மாநில அரசு தீவிரமான பணிகளை செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications