சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சக்ஸஸ் கருணாநிதி".. காலரை தூக்கிவிடும் திமுக.. தேசிய கொடியை ஏற்றிய முதல் முதல்வர்.. ஸ்டாலின் அபாரம்

முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தின் புரொபைல் போட்டோவை மாற்றி வைத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள புரொபைல் போட்டோவை ஏராளமானோர் திரண்டு பார்த்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன விஷயம்?

முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய புரொபைல் படத்தை மாற்றி வைத்துள்ளார்.. இந்த போட்டோவுக்கு ஒரு பின்னணி உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, ஜனவரி 26-ம் தேதி குடியரசு நாளன்று குடியரசுத் தலைவரும், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர நாளன்று இந்திய பிரதமரும் தேசிய கொடியை ஏற்றி வந்தனர்...

ஆனாலும், இந்த இரண்டு நாள்களிலும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரே தேசிய கொடி ஏற்றும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

என்.எல்.சி.யில் தமிழக இளைஞர்களுக்கு வேலை! பிரதமரை தலையிடக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்! என்.எல்.சி.யில் தமிழக இளைஞர்களுக்கு வேலை! பிரதமரை தலையிடக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

 சபாஷ்

சபாஷ்

இந்த வழக்கத்தை எதிர்த்து திமுக கேள்வி எழுப்பியது.. 1969ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில், அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி உரையாற்றினார்.. அப்போது, மாநில முதலமைச்சர்களுக்கு தேசிய கொடி ஏற்றும் உரிமையை வழங்க கோரிக்கையை விடுத்தார். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது.. அதன்படி, "மாநில தலைநகரங்களில் ஜனவரி 26, குடியரசு நாளன்று ஆளுநர்களும், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர நாளன்று முதலமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றுவார்கள்" என்று ஆணை பிறப்பித்தது.

 கருணாநிதி

கருணாநிதி

இதையடுத்து, 1974 ஆகஸ்ட் 15-ம் நாள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடி மரத்தில், முதல்வர் கருணாநிதி தேசிய கொடியை ஏற்றினார்... ஆக, சுதந்திர நாளன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக தேசிய கொடி ஏற்றிய பெருமை கருணாநிதியையே சாரும் என்பதை மறுக்க முடியாது.. கருணாநிதி பெற்றுத் தந்த இந்த உரிமையால்தான், இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதலமைச்சர்களும் சுதந்திர நாளன்று தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர் என்பதையும் மறக்க முடியாது.

கலைஞர்

கலைஞர்

"சுதந்திர திருநாளில் மாநில முதல்வர் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த மிகச் சிறந்த முதல்வர் கலைஞர் தான்" என்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கருணாநிதியை வெகுவாக பாராட்டவும் செய்தார்.. மத்திய அரசு பிறப்பித்து உத்தரவிட்ட அந்த ஆணையை கருணாநிதி கையில் வைத்தபடி இருக்கும் போட்டோக்கள் அப்போது பத்திரிகைகளில் பெரும் பாராட்டுக்களையும் பெற்றன.

 செயின்ட் ஜார்ஜ் கோட்டை

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

இப்போது விஷயத்துக்கு வருவோம்.. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் சுயவிவரப்படத்தை மாற்றியுள்ளார்... இந்திய மூவர்ணக் கொடியை வைத்துள்ளார்.. அத்துடன், கருணாநிதியின் போட்டோவையும் வைத்துள்ளார்.. 1974-ல் முதன்முதலில் உரிமை பெற்று முதல்வராக கருணாநிதி தேசிய கொடி ஏற்றி வைத்த போட்டோதான் இது.. மாநிலச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், அவருக்குப் பின்னால் உயரமான கம்பத்தின் மீது இந்திய தேசியக் கொடி பறக்க, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படிகளில் கெத்தாக இறங்கி வருகிறார்.

Recommended Video

    முதல்வர்கள் கையெழுத்தால் முன்னேறிய தமிழ்நாடு
    புரொபைல்

    புரொபைல்

    இந்த படத்தை பதிவிட்ட ஸ்டாலின், 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் மாநில முதல்வர்களின் உரிமையை முத்தமிழ் அறிஞர் தமிழ் அறிஞர் கலைஞர் உறுதி செய்தார் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் புரொபைல் படத்தை மாற்றியதைடுத்து, ஏராளமான திமுகவினரும் இதே புரொபலை வைத்து வருகின்றனர்.

    English summary
    greatest achievement by by karunanidhi and cm stalin changes twitter profile picture முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தின் புரொபைல் போட்டோவை மாற்றி வைத்துள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X