சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டைம் ஓவர்".. பூச்சாண்டி காட்டறீங்களா.. இது தமிழ்நாடு.. "கலைஞர்" மகனிடம் எடுபடாது.. சீறும் மதிமாறன்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து வே.மதிமாறன் ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஆட்சி போனாலும் பரவாயில்லை, எமர்ஜென்சியை ஆதரிக்க முடியாது என்று போர்க்குணத்துடன் எதிர்த்த அந்த கலைஞரின் மகன், ஸ்டாலின் ஆர்எஸ்எஸ் காட்டும் பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டார் என்று எழுத்தாளர் வே.மதிமாறன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஆர்எஸ்எஸ், பேரணி நடத்துவதாக இருந்தது.. ஆனால், இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கருதி, இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதுகுறித்த விவாதங்கள் சோஷியல் மீடியாவில் வெடித்து வருகின்றன.. இந்நிலையில், சிறந்த எழுத்தாளரும், பெரியாரிஸ்ட்டுமான வே.மதிமாறன், ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்..

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்! உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்!

 கேவலமோ கேவலம்

கேவலமோ கேவலம்

அவரிடம் சில கேள்விகளையும், சந்தேகங்களையும் முன்வைத்தோம். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்தான் இவை: "ஆர்எஸ்எஸ் பேரணியின் எச்சரிக்கையை உணர்ந்ததால், தடை உத்தரவு போட்டார் முதல்வர் ஸ்டாலின் வருங்காலத்தை உணர்ந்தும் இந்த தடையை போட்டார்.. தன்னுடைய நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பை வீசியபோது, பதற்றப்படாத முதலமைச்சர், இப்போது பதட்டமாகி உள்ளார்.. தன் அமைச்சர்கள் மீது, தன் தொண்டர்கள் மீது, தன் கட்சியின் மீது இழிவான நடவடிக்கைகளை பாஜக தலைவர்கள் உட்பட தினந்தோறும் பொய், கேவலமான வார்த்தைகளால் நடந்து கொண்டபோதுகூட அமைதி காத்தார் முதல்வர் ஸ்டாலின்..

 ரெஸ்பெக்ட்

ரெஸ்பெக்ட்

அப்படிப்பட்ட முதலமைச்சர், இந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை போடுகிறார் என்றால், இந்த எச்சரிக்கை அவருக்கு புரியுது.. என்னை நீ அவமானபடுத்தும்போதெல்லாம் பொறுத்துக் கொண்டேன், ஆனால் தமிழ்நாட்டை ரணகளமாக்குவதற்கு நான் அனுமதிக்க முடியாது என்பதுதான், முதல்வர் ஸ்டாலினின் தொனி. இது மரியாதைக்குரிய தொனி.. இதை உணர்ந்து தமிழக மக்கள் இதுபோன்ற நெருக்கடி நேரத்தில் முதல்வருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..

 எம்ஜிஆர்

எம்ஜிஆர்

தேர்தலில் வெற்றி பெறுவது, எதிர்கொள்வது என்பதைவிட, திமுக ஆட்சிக்கு, சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என்று சொல்லி நெருக்கடியை தருவதே பாஜகவின் முதல் திட்டம்.. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை சேர்ந்து நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்கள்.. அதுக்காக இதுபோன்ற கலவரங்களை கட்டமைக்கிறார்கள்.. அதற்காகத்தான் வெளியில் இருந்து ஆர்எஸ்எஸ்ஸை கூட்டிட்டு வருகிறார்கள்.

கருணாநிதி

கருணாநிதி

இப்படி ஒரு சதித்திட்டத்தை இங்கே செய்துவிட முடியுமா? இதையெல்லாம் பார்த்து மக்கள் ஓட்டுப்போடுவார்களா? எமர்ஜென்சியை அன்று எம்ஜிஆர் தீவிரமாக ஆதரித்தார்.. கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரித்தன.. அன்றைக்கு ஆட்சியில் இருந்தவர் கலைஞர், எமர்ஜென்சியை ஆதரித்து ஒரு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், ஆட்சியை கலைத்திருக்கவே முடியாது.. எம்ஜிஆர் என்பவர் உருவாகியிருக்கவே முடியாது.. ஆனால், ஆட்சி போனாலும் பரவாயில்லை, எமர்ஜென்சியை ஆதரிக்க முடியாது என்று போர்க்குணத்துடன் எதிர்த்த அந்த கலைஞரின் மகன்தான் ஸ்டாலின்..

 பூச்சாண்டி

பூச்சாண்டி

இதுபோன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் ஸ்டாலின் பயப்பட மாட்டார்.. எமர்ஜென்சிக்கு பிறகு, ஆட்சி கலைந்து, எம்ஜிஆரை கொண்டுவந்து வைத்தார்கள்.. அன்றைக்கு கலைஞர் விட்டுட்டார்.. ஆனால், இன்னைக்கு அப்படியெல்லாம் போக, எங்க தலைமுறையில் நாங்க விடமாட்டோம்.. பிராவிடன்ட் ஃபண்ட் உனக்கு வராது என்று காவல்துறை அதிகாரிகளையே அண்ணாமலை மிரட்டுகிறார்.. பாஜக மாநில தலைவரின் லட்சணமே இவ்வளவு கேவலமாக இருக்கிறதென்றால், இவர்களை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் இங்கே வந்தால் என்னாவது?

 பிக் + வார்னிங்

பிக் + வார்னிங்

எச்.ராஜா கோர்ட்டை அவ்வளவு கேவலமா பேசினாரே, அதுதான் இவர்களின் அரசியல்.. மக்களுக்கான நலத்திட்டம் பற்றியெல்லாம் இவர்களிடம் எதுவுமே கிடையாது.. போலீஸ் அதிகாரிகளை மிரட்டுவது போலவே முதலமைச்சரையும் மிரட்டி பார்க்கிறார்கள்.. இதையெல்லாம் மக்கள் கவனித்து கொண்டுததான் இருக்கிறார்கள்.. தக்க பாடம் தருவார்கள்.. அண்ணாமலை போன்றோருக்கு எச்சரிக்கையை தந்து, அதற்கு பிறகு இதை தடை செய்யணும்.. படித்த தலைவர்களாக தமிழ்நாட்டில் தேர்ந்தெடுங்க என்று ஜேபி நட்டா சொல்லிவிட்டு போயுள்ளார்..

 குரங்காட்டி

குரங்காட்டி

உத்தரபிரதேசத்தில் குரங்காட்டி ஒருத்தர் குரங்கை வைத்து ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறாரே, அதுதான் படித்தவர்கள் ஆட்சியா? உபியில் தினமும் வன்முறை நடக்குது.. பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை சேர்ப்பது கிடையாது.. வாத்தியாரை போலீஸே பிடித்து கொண்டு போகிறது.. ஆசிரியர்களை மாணவர்கள் கட்டி வைத்து அடிக்கிறார்கள்.. தினமும் உபியில் நடக்கும் ஆட்சியின் லட்சணத்தை பார்த்து, உலகமே காரி துப்புது.. இங்கே தமிழ்நாட்டில் படித்தவர்கள் உள்ளதால்தான், இந்த ஆட்சி உள்ளது.. சமூகநீதி அரசியலில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் உள்ளது.. இந்தியாவிலேயே அரசியல் அறிவு கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான்..

 குலக்கல்வி

குலக்கல்வி

புதிய கல்வி கொள்கை குறித்து நட்டா அவ்வளவு சொல்கிறாரே, 5 வருடங்களுக்கு முன்பே அந்த கொள்கை குறித்து நாங்கள் முழுமையாக படித்துவிட்டோம்.. ஆனால், நட்டாவே அதை படிச்சிருக்க மாட்டார்.. புதிய கல்வி கொள்கை குறித்து என்னுடன் அவர் விவாதிக்கட்டும்.. இல்லாவிட்டால் பிரின்ஸ் கஜேந்திரபாபுவுடன் நட்டாவை வந்து விவாதிக்க சொல்லுங்கள். அவர்கள் சொல்லும் கல்வி கொள்கையை ஆதரிப்பவர்களை, இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள், நாங்கள் அவர்களுடன் விவாதிக்கிறோம்.. படிச்சவன் யாரு, படிக்காதவன் யாரு என்பது அப்போது தெரிந்துவிடும். அன்று 1952-ல் மாறுபட்ட கல்வி திட்டத்தில் ராஜாஜி, என்னவெல்லாம் சொன்ன அதன் விரிவாக்கம்தான் இது... ராஜாஜி கொண்டுவந்தது மாறுபட்ட கல்வி திட்டம் கிடையாது, அதெல்லாம் குலக்கல்வி திட்டம் என்று பெரியார் எங்களை அரசியல்படுத்தி விட்டு போயுள்ளார் தந்தை பெரியார்..!! என்றார்.

English summary
Greatest Leader MK Stalin and Tamil Nadu is a leading state in India in terms of social justice politics, says mathimaran
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X