ஸ்டாலின் தந்த கிரீன் சிக்னல்.. உளவுத்துறையை வைத்து.. சைலண்ட்டாக தூக்கிய போலீஸ்.. மிரண்ட பாஜக
சென்னை: இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரும் பாஜக கூட்டணியில் இருப்பவருமான தேவநாதன் யாதவ், 525 கோடி ரூபாய் மோசடி குற்றத்தில் தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாஜகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலீடு செய்த ரூ 525 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்காத நிலையில் தேவநாதன் மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. இதில்தான் அவர் தற்போது கைதாகி உள்ளார்.
நிதி நிறுவனத்தில் ரூ 525 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மக்கள் கல்வி இயக்கத் தலைவர் தேவநாதன் யாதவ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் சென்னை குற்றப் பொருளாதார பிரிவு போலீஸார் 8 மணி நேரமாக துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்பே வரை கைது செய்துள்ளனர். சினிமா பாணியில் அவரை தேடிப்பிடித்துள்ளனர். தலைமறைவாகி இருந்தவரை உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் தட்டி தூக்கி உள்ளனர் போலீசார். அவரிடம் இருந்து முக்கியமான பல தகவல்களை பெற போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றன.

வேட்பாளர்: இவர் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் என்றாலும் பாஜகவின் சின்னத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவர் தேவநாதன். தேர்தலுக்கு பிறகு தலைமறைவானார். வட மாநிலங்களுக்குள் பயணப்பட்டு தமிழக போலீஸ் தன்னை நெருங்காதபடிக்குப் பார்த்துக்கொண்டார். ஆனால், அவரது மறைவிடத்தை தேடியபடி இருந்தது மாநில உளவுத்துறை.
தேடுதல் வேட்டை: இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக புகார் கொடுத்தவர் களிடம் தனது ஆட்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். இந்த விசயம், உளவுத்துறையினருக்கு கிடைத்தது. இதனை அடுத்து அவரை சீரியசாக கவனித்தது. அப்போதுதான் கடந்த வாரம் தமிழ்நாட்டிற்குள் வந்த தேவநாதன் திருச்சியில் பதுங்கியிருப்பதை கண்டறிந்த உளவுத்துறை, அந்த தகவலை அரசின் மேலிடத்துக்கு கொண்டு சென்றது.
ஸ்டாலின் தந்த கிரீன் சிக்னல்: முதல்வர் அலுவலகத்தில் கிரீன் சிக்னல் கிடைக்க, உடனே களத்தில் இறங்கிய போலீஸ், தேவநாதனை கைது செய்தது. தேவநாதன் கைது விவகாரம் நேற்று பாஜக தரப்பில் பலத்தை அதிர்ச்சியை ஏற்படுத்த, இந்த சம்பவத்தை பாஜகவின் தேசிய தலைமைக்கு தெரிவித்திருக்கிறார்கள் தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள்.
என்ன புகார் இவர்மீது ?: தேவநாதன் தலைவராக உள்ள மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 முதல் 15 சதவீதம் வரை வட்டிக் கொடுப்பதாக ஆசை காட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் வட்டி பணமான ரூ 50 கோடியை முதலீட்டாளர்களுக்கு தரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இதில் அவர் பல முறைகேடுகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலீடு செய்த ரூ 525 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்காத நிலையில் தேவநாதன் மீது புகார்கள் கொடுக்கப்பட்டன.
பாஜகவின் மேலிட பொறுப்பாளரான அரவிந்த் மேனன், இது குறித்து தமிழக பாஜக தலைவர்களிடம் விசாரித்திருக்கிறார். அப்போது, கூட்டணியில் சேர்க்கும் கட்சிகளையும் கூட நாம் ஸ்கேன் பண்ணனும் போல என கமெண்ட் பாஸ் பண்ணியிருக்கிறார் அரவிந்த்மேனன்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications