Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இனி விநாயகர் சிலைகளை கரைக்கவும் கட்டணம்.." தமிழ்நாடு அரசுக்கு வந்த திடீர் உத்தரவு.. பின்னணி என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் நிலையில், அதற்கான கட்டணத்தைத் தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அறிவிக்கப்படாத நீர்நிலையில் கரைத்தால் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுக்க வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி இருக்கிறது. கொரோனா ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் கடந்த காலங்களில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகவே கொண்டாடப்பட்டு இருக்கிறது.

 Green Tribunal orders Tamilnadu govt should charge fees for vinayagar statues dissolving in water bodies

விநாயகர் சதுர்த்தி சமயத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை வைக்கப்படும்.. விநாயகர் சிலைகள் வீட்டில் வைத்தும் பொது இடங்களில் வைத்தும் பூஜை செய்யப்படும்.

கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்: பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அலங்காரம் செய்யப்படும்.. மேலும், பூஜை செய்து மூன்று நாட்களுக்குப் பிறகு ஆறுகள் அல்லது ஏரிகளில் விநாயக சிலைகள் கரைக்கப்படும். நமது தலைநகர் சென்னையில் நீர்நிலைகள் இல்லாத நிலையில், வழக்கமாக அவை சென்னை கடற்கரையில் கரைக்கப்படும். இருப்பினும், கடந்த சில காலமாகவே இந்த விவகாரத்தில் சர்ச்சை நிலவுகிறது.

அதாவது விநாயகர் சிலைக்கு ரசாயன வண்ணக் கலவைகளைப் பூசி அழகுபடுத்துகிறார்கள். அந்த ரசாயன கலவைகளை அப்படியே கடலில் கலப்பதால் நீர் மாசு ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக விநாயகர் சிலையைக் கரைக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர். இது தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு: அந்த மனுவில், "விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை சமயங்களில் ரசாயன வண்ண கலவைகளுடன் சிலைகள் கரைக்கப்படுவதால் மாசு ஏற்படுகிறது. இதனால் சிலைகளைக் கரைப்பதைத் தடை செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல் படி சிலைகளைக் கரைக்க எனத் தனியாகச் செயற்கை நீர் நிலையை உருவாக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த மனு தீர்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "சிலைகளைக் கரைப்பதால் நீர்நிலை மாசு மட்டும் ஏற்படுவதில்லை. சிலையில் கரையாத பாகங்கள் மீண்டும் கரைகளில் ஒதுங்குகின்றன. அவற்றைச் சுத்தப்படுத்தும் சுமை அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏற்படுகிறது. எந்த நீர்நிலைகளில் சிலைகளைக் கரைக்கலாம் எனச் சொல்லும் அதிகாரிகள். அதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வதில்லை.

கட்டணத்தை வசூலிக்க வேண்டும்: எனவே, அறிவிக்கப்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். ஒரு சிலை எந்தளவில் இருக்கிறதோ.. அதற்கேற்ப அதிகாரிகள் குழு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்" எனத் தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழுவுக்கு உத்தரவிட்டார். அப்படி வசூலிக்கும் கட்டணத்தை நீர்நிலை பராமரிப்புக்குச் செலவிடலாம் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளைக் கரைத்தால் அபராதம் எந்தளவுக்கு விதிக்கப்படும் என்பதை முடிவு செய்யவும் அறிவுறுத்தினர். இந்த தகவல்களை விநாயகர் சதுர்த்திக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே விளம்பரங்களாக வெளியிடவும் உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+