Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எண்ணூர் பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய்! தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது பசுமை தீர்ப்பாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் வட சென்னை பகுதிகளில் இன்னும் வடியாமல் இருக்கிறது. இந்நிலையில் பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் கலந்திருக்கிறது. இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

வழக்கமாக சாதாரண பருவமழைக்கே சென்னை ஒரு மாதிரி கசகச என்றுதான் இருக்கும். இந்நிலையில், கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வேளச்சேரி போன்ற புறநகர் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை.

Green Tribunal registers case in case of crude oil mixed in Buckingham Canal in Chennai

மறுபுறம் சென்னையின் நகர் பகுதிகளான, வட சென்னை பகுதியில் மக்கள் மின்சாரம், குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். வடசென்னையின் பட்டாளம், அம்மையம்மன், திருவொற்றியூரின் சில பகுதிகள், மணிலியின் ராஜீவ்காந்தி நகர் என பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. இதில் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்திருப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை திருவள்ளூரில் பெய்யும் கனமழைக்கு வடிகாலாக செயல்படுவது கொசஸ்தலை ஆறுதான். இப்படி இருக்கையில் கடந்த 4ம் தேதி அதிக அளவு மழை பெய்ததால் இந்த ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. போதாத குறைக்கு புழல் ஏரியிலிருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. எனவே வடசென்னையின் எண்ணூர், மணலி, எர்ணாவூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

மட்டுமல்லாது இந்த பகுதிகளில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலும் வெள்ளம் புகுந்திருக்கிறது. இந்நிறுவனங்கள் மழைநீரை வெளியேற்றும்போது அத்துடன் சேர்ந்து கச்சா எண்ணெய்யும் வெளியேறியிருக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் கச்சா எண்ணெய் சூழந்ததால் மக்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டிருக்கின்றனர். கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது இது எரியும் தன்மை கொண்டதால் மக்கள் வீடுகளில் சமைக்கவே அச்சப்படுகின்றனர்.

மறுபுறம் கச்சா எண்ணெய் கடலிலும் கலந்திருக்கிறது. இது தொடர்பாக கொடுங்கையூரில் ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(சிபிசிஎல்) நிறுவனத்திலிருந்து மழை நீர் வெளியேற்றப்பட்டபோது அதன் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது என்று விளக்கமளித்துள்ளது. அதாவது பூமிக்கு அடியில் கச்சா எண்ணெய் தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளம் சிபிசிஎல் நிறுவனத்தை சூழ்ந்ததையடுத்து அதை வெளியேற்றியிருக்கிறார்கள். அப்போது கச்சா எண்ணெய்யும் சேர்ந்து வெளியேறியுள்ளது.

கடலில் எண்ணெய் கலந்திருப்பதால் மீன் வளம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையில் தொடங்கியது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக ஆய்வு செய்து நாளை பதிலளிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+