மரணத்தருவாயிலும் கிரீஷ்மாவை தேடிய ஷாரோனின் கண்.. சிரித்தே கொன்ற பெண்.. மோசக்கார மாமாவின் கொடூர விஷம்
சென்னை: நாட்டையே உலுக்கிய ஷாரோன் வழக்கில், இளம்பெண் கிரீஷ்மாவுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. இந்த கொலை சம்பவத்தில் கிரீஷ்மாவின் தாய் மாமா நிர்மல் குமாருக்கும் 3 தண்டனை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.. இந்த கொலை வழக்கில் தாய் மாமன் எப்படி உள்ளே வந்தார்?
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ்... கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ்மா.

நெருக்கம்: திங்கள்நகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு படித்துவந்துள்ளார் ஷாரோனுக்கும்.. அழகியமண்டபம் பகுதியில் கல்லூரியில் எம்.ஏ படித்து வந்துள்ளார் கிரீஷ்மாவுக்கும் .. கடந்த 2021ல்தான் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.
2 பேருமே அவரவர் காலேஜூக்கு ஒரே பஸ்ஸில்தான் சென்று வந்துள்ளனர்.. அப்படித்தான் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. ஷாரோனின் ரெக்கார்ட் நோட்டுக்களை, கிரீஷ்மா எழுதித்தருவாராம். இறுதியாண்டு படிப்பில், ஷாரோனின் மொத்த ரிக்கார்டு நோட்டையும் கிரீஷ்மாதான் எழுதி தந்துள்ளார். நாளுக்கு நாள் இவர்களின் நட்பு காதலாக மாறியிருக்கிறது.
குமரி மாவட்டம்: இதனால் குமரி மாவட்டத்தின் பல இடங்களிலும் சென்று காதலை வளர்த்துள்ளனர். இதற்கிடையே கிரீஷ்மாவுக்கும் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர்.. இதில் தாய்மாமன் நிர்மல்குமார், சற்று கூடுதல் கவனம் செலுத்தி பெரிய வீட்டு வரனாக தேடியிருக்கிறார்.. அப்போதுதான், ராணுவவீரர் ஒருவரை பார்த்து பேசி, அவருடன் க்ரீஷ்மாவுக்கு நிச்சயம் செய்துள்ளனர்.
ராணுவவீரரை திருமணம் செய்ய முடிவு செய்த கிரீஷ்மா, ஷாரோனிடம் தன்னை மறந்துவிடும்படி சொல்ல, அதைக்கேட்டு ஷாரோன் அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார்.. உன்னை என்னால் சாகும்வரை மறக்கவே முடியாது என்றும் உறுதியாக சொல்லியிருக்கிறார். காதலனின் இந்த மன உறுதிதான், அவரது உயிரையே பறிக்க செய்திருக்கிறது.
மாத்திரைகள்: விஷம் கலந்து கொடுத்து எப்படி கொலை செய்யலாம்? அதற்கான தண்டனை விபரங்கள் என்ன என்று கூகுளில் தேடினாராம் கிரீஷ்மா. பிறகு பாராசிட்டமால் மாத்திரைகளை வாங்கி வைத்து, ஜூஸில் கலந்து ஷாரோனை கொல்ல முயன்றுள்ளார்.. ஏற்கனவே 10 முறை இப்படி முயற்சி செய்தும், ஒவ்வொரு முறையும் ஷாரோன், சிறிது பாதிப்புடன் உயிர் தப்பியிருக்கிறார்..
இதற்கு பிறகே தன்னுடைய அம்மா, தாய்மாமா நிர்மல்குமாரிடம் சொல்லி உதவி கேட்டுள்ளார் கிரீஷ்மா.. ஜூஸிலும், கஷாயத்திலும், விஷம் கலந்து கொடுக்கும்படி, இருவர் தந்த ஐடியாவால்தான், டோலோவை தூக்கி தூரப்போட்டுவிட்டு, விஷத்தை கையில் எடுத்தார் க்ரீஷ்மா.. அதுமட்டுமல்ல, மேங்கோ ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தால், அதன் நிறம் மாறாது என்பதால்தான், அதனை தேர்ந்தெடுத்துள்ளனர்..
தாய்மாமன்: ரப்பர் மரத்துக்கு போடப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை தந்து, அதனை கசாயத்தில் கலந்து தரும்படி தாய்மாமன் நிர்மல்குமார், ஐடியா தந்து, பூச்சிக்கொல்லி மருந்தை கிரீஷ்மாவிடம் வாங்கி தந்துள்ளார்.. ஷாரோனை வீட்டுக்கு வரவழைத்து தரும்படியும் தாய்மாமாவும், அவரது அம்மாவும் கிரீஷ்மாவிடம் சொல்லி உள்ளனர். அதன்படியே கிரீஷ்மாவும் செய்துள்ளார்..
சம்பவத்தன்று காலையில் 7.30 மணிக்கு, அந்த விஷம் உடலுக்குள் சென்று எவ்வாறு செயல்படும்? என்று கிரீஷ்மா இணையதளத்தில் தேடியிருக்கிறார்.. அந்த விஷத்தின் தன்மையைத் தெரிந்துகொண்டுதான் கிரீஷ்மா அன்று காலை 10.30 மணிக்கு தந்துள்ளார்.
விஷப்பூச்சி: ஆனால், ஷாரோனுக்கு கஷாயம் கொடுத்த 2 நாட்களுக்குப் பிறகுதான், விவரத்தை நிர்மல் குமாரிடம் சிந்து கூறியுள்ளார். இதற்கு பிறகே, கொலை செய்ய பயன்படுத்திய கஷாய பாட்டில், விஷபூச்சி மருந்து பாட்டில் போன்றவை, போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக, அவற்றை தீவைத்து எரித்துள்ளார் தாய்மாமன்..
இப்படி ஆதாரங்களை மறைத்ததற்காகவே ஐபிசி இன் பிரிவு 201ன் கீழ் தண்டிக்கப்பட்டார் நிர்மல்குமார்.. எனினும், ஆதாரங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரது தாயார் சிந்து விடுவிக்கப்பட்டார்.
மாற்று மருந்து: ஷாரோனுக்கு தரப்பட்ட விஷம், 15 மில்லி உடலுக்குள் சென்றாலே மரணம் நிச்சயமாம்.. அந்த விஷத்தை முறித்து காப்பாற்றும் மாற்று மருந்து எதுவுமே இல்லை என்று டாக்டர்கள் வாக்குமூலத்திலும் சொல்லியிருக்கிறார்கள்.. ஷாரோன் இறந்தது தொடர்பான விசாரணையை போலீசார் துவங்கியபோதே, இப்படியொரு கொலையை தனியொரு பெண்ணாக செய்திருக்க முடியாது என்று போலீசார் சந்தேகப்பட்டபோதுதான், தாய்மாமன், தாய் இருவரும் சிக்கினார்கள்.
கிரீஷ்மாவின் குடும்பம் ஜோசியத்தில் அதீத நம்பிக்கை கொண்டவர்களாம். மகளின் திருமணத்துக்காக ஜோசியம் பார்த்தபோது, உங்கள் மகளை நிச்சயம் செய்யும் முதல் மாப்பிள்ளையை கொலை செய்தால் அடுத்து வரும் வரன் சிறப்பாக அமையும் என்றும் மகளின் வாழ்க்கை செழிக்கும் என்றும் ஜோசியக்காரர் சொன்னாராம்..
பரிகாரம்: இதற்காகவே ஒரு இளைஞரை நிச்சயம் செய்வது போல நடித்து பிறகு அவரை தீர்த்துக்கட்டிடலாம் என குடும்பத்தினர் முடிவு செய்திருந்தார்களாம்.. அந்தநேரததில்தான் ஷாரோன் சிக்கியிருக்கிறார்.
எந்த சூழலிலும் தன்னுடைய கொலை திட்டத்தை கசியவிடாமல் கிரீஷ்மாவும், ஷாரோனிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். ஷாரோனுடன் வெளியில் செல்லும் நேரமெல்லாம் கையில் விஷம் கலந்த சிலைஸ் பாட்டிலுடன்தான் போவாராம். இப்படி பார்த்து பார்த்து திட்டமிட்டு கொலை செய்துள்ளார் கிரீஷ்மா, ஆனால் மரண வாக்குமூலத்திலும், கிரீஷ்மாவை காட்டி கொடுக்காமலேயே பரலோகம் போய்விட்டார் ஷாரோன்..!!
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications