மளிகை கடைகளில்.. டக்னு நுழைந்ததுமே திகைத்து நின்ற ஆபீசர்ஸ்.. சென்னை உட்பட சாட்டையை சுழட்டிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மளிகை கடைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.. பொதுமக்கள் மூலம் வரப்படும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மளிகை கடைகளில் அதிரடி சோதனையை காவல்துறை மேற்கொள்கிறார்கள். என்ன காரணம்?

சென்னையில் போதை பொருட்கள் புழக்கத்துக்கு எதிரான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.. கடந்த வாரம் முழுவதுமே சென்னை போலீசார் விழிப்புடன் செயல்பட்டு, போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதான நடவடிக்கையை எடுத்திருந்தனர்.

chennai anti narcotics

சென்னை போலீஸ்: அந்தவகையில், சென்னை பெருநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொண்டு கைது செய்ய கமிஷன் ஆ.அருண் உத்தரவிட்டிருக்கிறார். நேற்றுகூட காவல்துறை தரப்பில் ஒரு அறிக்கை வெளியாகியிருந்தது.

அதில், "கடந்த 06.09.2024 முதல் 08.09.2024 வரையிலான 3 நாட்கள் "போதை தடுப்பு நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குற்றவாளிகள்: இந்த அதிரடி நடவடிக்கையினால், 3 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்பாக 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 334 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 58 சரித்திரப்பதிவேடு போக்கிரிகள் அடங்குவர். கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர், விற்பவர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது.

பெரும்பாலும், கஞ்சா பொருட்களை மளிகை கடைகளில் வைத்து விற்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மளிகை கடைகளிலும் போலீசார் சோதனை நடத்துகிறார்கள். சென்னை மட்டுமல்லாமல், கஞ்சா போதைக்கு எதிரான காவல்துறையினரின் இந்த அதிரடி வேட்டை தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 10ம் தேதி, ஓலையூர் மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்திவரும் நல்லுசாமி, பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் வைத்திருந்த நிலையில், அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டன.

குடோன்: திருப்பூர், பிஎன் ரோடு, காட்டன் மில் ரோடு பகுதியில் ராஜா என்பவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடையின் பின்பக்கமிருக்கும் குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு கடந்த வாரம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உடனே போலீசார், அப்பகுதிக்கு குடோனில் சோதனை மேற்கொண்டதில், 230 கிலோ புகையிலை பொருட்களை அங்கு விற்க தயாராக வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்திருந்தனர்.

நேற்றைய தினம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், பஞ்சப்பூர் அருகே பிரபல பார்சல் ஆபீசிலும், பான்பராக், குட்கா பறிமுதல் செய்யப்பட்டள்ளது.. பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் 190 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

போலீஸ் வார்னிங்: மேலும் இது போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அல்லது கலப்பட உணவு பொருட்கள் கண்டறியபட்டால் புகார் தெரிவிக்கலாம் என்றும் தங்கள் தகவல் ரகசியம் காக்கப்பட்டு, குற்றம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+