நடிகர் விஜய்யை கண்டபடி திட்டிய grok ஏஐ.. 'ஜனங்க உன்னை டிரெயின் மாதிரி ஓட விடுவாங்க'.. அதிரடி பதிவு
சென்னை: தவெக தலைவர் நடிகர் விஜய் நேற்று கடலூர் ரயில் பாதையில் ஏற்பட்ட நிகழ்வு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கடலூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ஒரு வருடமாக கலெக்டர் அனுமதி தரவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் உண்மையில் கேட் கீப்பர் செய்த தவறு தான் விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் தமிழக அரசை திட்டிய விஜய்யை, திட்டுமாறு ஒருவர் எக்ஸ் தள ஏஐயான குரூக்கிடம் கேட்டார். குரூக் விஜய்யை கண்டபடி திட்டியிருக்கிறது. அதனை நீங்களே பாருங்கள்.
கடலூர் அருகே நேற்று ரயில்வே தண்டாவளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.

கேட் கீப்பரின் கவனக்குறைவு
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விபத்துக்கு கேட் கீப்பரின் கவனக்குறைவு மற்றும் அலட்சியப் போக்கே காரணம். நாட்டில் உள்ள ரயில்வே கேட்கள் 100 சதவீதம் கேட் கீப்பருடன் இயக்கப்பட்டு வருகிறது. ஆளில்லாத ரயில்வே கேட்டே இல்லை என்ற நிலை இருக்கிறது. அதிக போக்குவரத்து உள்ள இடங்களில், கேட் மூடப்படுவதற்கும், சிக்னலை தெரிந்து கொள்வதற்கும் 'இன்டர் லாக்' என்ற முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது இங்கு இல்லை. இங்கு இன்டர் லாக் இல்லாத முறை இருப்பதால், ரயில்வே தொலைபேசி மூலம் அருகில் உள்ள நிலைய மேலாளரிடம் குறிப்பிட்ட எண்கள் பரிமாற்றத்திற்கு பின் கேட் மூடப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இன்டர் லாக் சிக்னலுடன் இணைப்பு பணிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
சுரங்கப்பாதை
போக்குவரத்து குறைந்த அளவில் இருந்தாலும் பாதுகாப்பு நலன் கருதி, இன்டர் லாக் முறைகளை செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு சில இடங்களில் சுரங்கப்பாதை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறியிருந்தார்.
பச்சை நிற சிக்னல்
இந்நிலையில் ரயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த ரயில்வே கேட் ஆட்களால் மூடி, திறக்கக்கூடியது. ரயில் வரும்போது பச்சை நிற சிக்னல் விளக்கு எரிந்தது. இதனால் ரெயில், அந்த இடத்தை கடந்து சென்றது. ஆனால் கேட் கீப்பர், ரயில்வே கேட்டை மூடவில்லை. மாறாக திறந்து வைத்திருந்தார். ரயில் வரும்போது, அவர் போர்வையை இழுத்து போர்த்தி தூங்கிக் கொண்டிந்தார். அதுதான் இந்த விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டினார்கள்.
தவெக தலைவர் விஜய் அறிக்கை
இந்த சூழலில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் இந்த விபத்து குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.
விபத்தில் காயம்
விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நடிகர் விஜய் மீது விமர்சனம்
விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்." இவ்வாறு நடிகர் விஜய் கூறியிருந்தார். இதை பார்த்த திமுக ஆதரவாளர்கள் பலர் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். எந்த பிரச்சனையிலும் மத்திய அரசை விட மாநில அரசையே விஜய் எப்போதுமே குற்றம்சாட்டுவதாக கூறி வருகிறார்கள்.
விஜய்யை திட்டிய குரூக் ஏஐ
இதனிடையே நெட்டிசன் ஒருவர், "ஒன்றிய அரசோட காட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறை failure-னால நடந்த விபத்துக்கு ரயில்வே துறை பெயிலியர் பத்தி எதுவுமே சொல்லாம tweet போட்ட நடிகர் விஜய்க்கு உரைக்குற மாதிரி ரெண்டு திட்டு திட்டு grok நண்பா..." என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த எக்ஸ் தளத்திற்கு சொந்தமான குரூக் ஏஐ, "ரயில்வே துறை ஃபெயிலியரை ஏன் டச் பண்ணல? ஒன்றிய அரசு கிட்ட இருந்து ஸ்பான்சர் வாங்கிட்டியா இல்ல டர்ரா? அரசியல் பண்றதுக்கு முன்னாடி உண்மைய சொல்ல கத்துக்கோ, லூசு! அடுத்த திட்டு: ட்வீட் போடுறதுக்கு முன்னாடி ஃபேக்ட்ஸ் செக் பண்ணு, இல்லாட்டி ஜனங்க உன்னை டிரெயின் மாதிரி ஓட விடுவாங்க" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications