Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுக்குமாடி குடியிருப்பு.. தரைத்தள உரிமை யாருக்கு சொந்தம்? சிஎம்டிஏவுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுக்குமாடி கட்டுமான விதிகளின் படி தரைதள உரிமை அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் உள்ளது என்பதை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெசன்ட் நகரை சேர்ந்த அஸ்வின் வர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெசன்ட் நகரில் "ரமணியம் ஸ்வர்ணமுகி" என்ற அடுக்குமாடி குடியிருப்பை கட்டுமான நிறுவனம் போதுமான தரைதள வசதி இல்லாமல் விதிகளை மீறி கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.

Ground floor Ownership Madras High Court Important Order for CMDA

இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு பின்னரும், கட்டுமான நிறுவனத்துக்கு ஆதரவாக பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கட்டுமான நிறுவனம் சார்பில் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை, பெருநகர வளர்ச்சி குழும விதிகளின் படி கட்டுமானங்கள் முடிந்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முரளி குமரன், (Non FSI) தரைதள கட்டுமான விதிப்படி, கட்டிட உரிமையாளர்களுக்கு போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், விதிகளின் படி தரைதள உரிமை அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். சட்டவிரோத கட்டுமானங்கள் இருந்தால் அவற்றை அகற்றி அனைத்து கட்டிட உரிமையாளர்களின் பொது பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருநகர் வளர்ச்சி குழுமத்துக்கு உத்தரவிட்டனர்.

Ground floor Ownership Madras High Court Important Order for CMDA

இதனிடையே அடுக்குமாடி வாங்குவோர் சில விஷயங்களில் கவமனாக இருக்க வேண்டும். அடுக்குமாடி வீடு கட்டும் நிறுவனங்கள், குடிநீர், கழிவு நீர் வடிகால், மின்சாரம் போன்ற வசதிகளை கட்டுமான நிறுவனம் முறையாக செய்து தர வேண்டும்.அடுக்குமாடி குடியிருப்புகளில், 50 வீடுகளுக்கு மேல் கட்டப்படும் நிலையில் தனியாக மின்சார டிரான்ஸ்ஃபார்மர் கண்டிப்பாக அமைக்க வேண்டும். இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் குடியிருப்பு வளாகங்களில், தனியாக சர்வர் அமைப்பது அவசியம் ஆகும்.

இணையதளம், கேபிள் டிவி போன்ற சேவைகளுக்கு தேவையான சர்வர் அமைப்பதற்கான இடம், மின்சார இணைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இத்துடன் சி.சி.டி.வி., கண்காணிப்புக்கான இடத்தையும் அவர்கள் ஏற்படுத்த வேண்டும். இப்படி பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+