கிரவுண்டு ஜீரோ.. கரூர் கொடூரம் நடக்கும் முன்பே.. விஜய் பிளான்.. பிள்ளையார் சூழி போடப்பட்டது அங்கதான்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழக கூட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் போட்ட சில திட்டங்கள்தான் கரூரில் நேற்று பயங்கர அசம்பாவிதம் நடக்க காரணமாகிவிட்டது என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிப்பார் என்று தகவல் வெளியானது. தற்போது இந்த சம்பவம் காரணமாக விஜய் தனது பயணத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் டிசம்பர் 20 வரை மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயணம், தற்போது பிப்ரவரி 21 வரை தொடரும் என கூறப்பட்டது.
இந்த நீட்டிக்கப்பட்ட பயணத்தின்போது, அவர் 18 சனிக்கிழமைகளிலும், 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். இந்த புதிய கால அட்டவணை, விஜயின் மக்கள் தொடர்பு முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அந்த முடிவை திரும்ப பெற்று.. மொத்தமாக விஜய் தனது பயணத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கரூர் கிரவுண்டு ஜீரோ - விஜய் காரணம்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழக கூட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் போட்ட சில திட்டங்கள்தான் கரூரில் நேற்று பயங்கர அசம்பாவிதம் நடக்க காரணமாகிவிட்டது என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
1. முதலில் இந்த பயணத்தை அவர் சனிக்கிழமை திட்டமிட்டார். சரியாக தீபாவளி காலத்தில் அவர் மக்கள் கூட்டம் வரும் என்று திட்டமிட்டு சனிக்கிழமையை முடிவு செய்தார்.
2. வாரம் முழுக்க மக்களை திரட்டுவதற்காக ஏற்பாடுகளை செய்வது.. வார இறுதியில் மக்களை பார்க்க வருவது பிளான்.
3. வாரம் முழுக்க விஜய்க்காக காத்திருக்கும் ரசிகர்கள்.. வார கடைசியில்.. வந்து விஜயை பார்ப்பார்கள். இதனால் கூட்டம் கூடும்.
4. ஒரே நாளில் 4-5 சட்டசபையை கொண்ட மாவட்டங்களில் கூட்டம் நடப்பதால் பல ஆயிரம் பேர் கூட்டத்தை பார்க்க வருவார்கள். இதனால் கூட்டம் அதிகமாக இருக்கும்.
5. இந்த சனிக்கிழமை திட்டம்தான் மிகப்பெரிய பிரச்சனை. அதுதான் அங்குதான் பிள்ளையார் சூழி போடப்பட்டது.
6. விஜய் தினமும் வந்திருந்தால் இவ்வளவு கூட்டம் வந்திருக்காது. மக்கள் தினமும் அவரை பார்த்து இருப்பார்கள்.
7. ஆனால் விஜய் வார கடைசி மட்டும்தான் வருவேன் என்று நினைத்தது இந்த கொடூரத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது. விஜய் மக்களால் அணுக முடியாத தலைவராக இருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், கருணாநிதி போன்றவர்களை மக்கள் எளிதாக சந்திக்க முடியும். அவர்கள் அருகில் இருந்து பேச முடியும். இதனால்தான் அவர்கள் பொதுவில் வந்தால் ரசிகர்கள் போல மக்கள் துரத்திக்கொண்டு வரவில்லை. ஆனால் விஜய் இப்போதும் ஹீரோ போல.. மக்களை நெருங்காமல் இருக்கிறார். இதனால்தான்.. அவர் வந்தால்.. எப்படியாவது இந்த முறை பார்த்துவிட வேண்டும் என்று சனிக்கிழமை சனிக்கிழமை மக்கள் ஓடி வருகிறார்கள்.
உயரும் பலி எண்ணிக்கை?
கரூர் விஜய் பரப்புரையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவகள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 பேரின் உடல்கள் அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications