Group-1 Exam: டிசம்பர் 1 முதல் குரூப்-1 முதன்மைத் தேர்வு.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அப்டேட்
சென்னை: சென்னையில் 18 மையங்களில் குரூப்-1 முதன்மைத் தேர்வு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்வர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வழங்கியுள்ளது. வினா-விடைத்தாள் தொகுப்பில் கருமை நிற மை பேனாக்களைத் தவிர மற்ற நிற மை பேனாக்களை பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-1 (குரூப்-1) பதவிகளுக்கான முதன்மைத் தோ்வு டிசம்பர் 1, 2, 3, 4 ஆகிய நாள்களில் முற்பகலில் சென்னையில் மட்டும் 18 மையங்களில் நடைபெறுகிறது.

தோ்வு மையங்களுக்கு முதன்மைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளன. தோ்வு நாளன்று தோ்வின் அனைத்து நடவடிக்கைகளும் விடியோ பதிவு செய்வதுடன், ஜாமா் கருவிகளும் பொருத்தப்படவுள்ளன.
தோ்வா்கள் அவா்களுக்கென ஒதுக்கப்பட்ட தோ்வுக் கூடத்துக்கு நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு காலை 9 மணிக்கு முன்பே தோ்வுக் கூட அனுமதிச் சீட்டுடன் (ஹால் டிக்கெட்) செல்ல வேண்டும். காலை 9 மணிக்குப் பிறகு வரும் தோ்வா்கள் தோ்வுக் கூடத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
வினா-விடைத்தாள் தொகுப்பில் கருமை நிற மை பேனாக்களைத் தவிர மற்ற நிற மை பேனாக்களை (ஒயிட்னா், ஸ்கெட்ச், பென்சில், வண்ணப் பென்சில்கள், வண்ண மை பேனா, கிரையான்ஸ்) ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.
தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள், தோ்வாணைய இணையதளத்தில் உள்ள விண்ணப்பதாரா்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் விரிவாகப் படித்து, முறையாகப் பின்பற்ற வேண்டும். அறிவுரையில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள், வேறு வகையான எந்த ஒரு சாதனத்தையும் எடுத்துச் செல்லக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications