பலத்த சந்தேகம் வருது.. குரூப் 2, 2A தேர்வு முடிவு கால தாமதம் ஏன்.. நாம் 1960களில் இல்லை.. பாஜக அண்ணாமலை
சென்னை: குரூப் 2, 2A அரசுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதோடு, காலதாமதத்துக்கான காரணங்களையும் பொதுவெளியில் கூற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்று அழைக்கப்படும் டிஎன்பிஎஸ்சி, தமிழகத்தில் அரசு வேலைக்கு துறை வாரியாக ஆட்களை தேர்வு செய்து வருகிறது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி கடந்த சில ஆண்டுகளாக பணியாளர்களை தேர்வு செய்வதில் சுணக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக குரூப்-2, 2ஏ ஆகியவற்றில் 5 ஆயிரத்து 446 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் நடந்தது.

இந்த முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. தேர்வு முடிந்த சில மாதங்களில் தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இதுவரை முடிவு வெளியிடப்படவில்லை. இதனால் நொந்துபோன டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள், குரூப் 2 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
அண்ணாமலை கேள்வி: இதேபோல் அரசியல் தலைவர்களும் இந்த விவகாரம் குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒன்றரை லட்சம் பேப்பர்களை திருத்துகின்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் கூட 75 நாட்களில் வந்துவிடுகிறது என்றும், ஆனால் ஒரு லட்சம் பேப்பர்களை திருத்தும் டிஎன்பிஎஸ்சி முடிவுகள் மட்டும் 270 நாட்களை கடந்தும் வெளி வரவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அரசை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
அதில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:- தமிழக அரசுப் பணிகளுக்காக, கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, 2A முதன்மைத் தேர்வு முடிவுகள், 10 மாதங்கள் கடந்தும் இன்னும் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது திமுக அரசு. தேர்வுகள் நடைபெறும்போதே, சில தேர்வு மையங்களில் காலம் தாழ்த்தி தேர்வு தொடங்கியதாகவும், வினாத்தாள்கள் வெளியானதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தேர்வாளர்கள் மறுதேர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
நியாயமாக நடந்துகொள்ளுமா?: ஆனால், தேர்வுகள் முறையாகவே நடைபெற்றன என்று கூறிய தமிழக அரசு, முடிவுகளை வெளியிடக் காலம் தாழ்த்தி வருவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமிப்பதற்காக, ஒரு ஆண்டுக்கும் மேலாக அந்தப் பதவியைக் காலியாகவே வைத்திருக்கும் திமுக அரசு, போட்டித் தேர்வு எழுதி, அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களிடம் மட்டும் நியாயமாக நடந்து கொள்ளப் போகிறதா என்ற கேள்வி எழுகிறது.
3 லட்சம் பேருக்கு வேலை?: ஆட்சிக்கு வந்ததும் மூன்று லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு, தேர்வு முடிவுகளை வெளியிடவே மாதக்கணக்கில் தாமதமாக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றி விட்டதாக மேடைக்கு மேடை பொய் சொல்லி யாரை ஏமாற்றிக் கொண்டிருக்குகிறார்? உடனடியாக குரூப் 2, 2A அரசுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதோடு, காலதாமதத்துக்கான காரணங்களையும் பொதுவெளியில் கூற வேண்டும்.
தேர்வு முடிவுகள் தேதியும்: அரசுப் பணிகளுக்காகத் தேர்வுகள் எழுதி, எப்போது முடிவுகள் வரும் என்றே தெரியாமல், அரசின் தவறுகளால் அலைக்கழிக்கப்படும் இளைஞர் சமுதாயம், இனியும் இது போன்ற திறனற்ற செயல்பாடுகளைப் பொறுத்துக் கொள்ளாது. இன்னும் நாம் 1960களில் இல்லை. இனி வரும் காலங்களில், தேர்வு தேதி அறிவிக்கப்படும் அன்றே, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியையும் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications