குரூப் 2 குளறுபடிக்கு காரணம் இதுதான்..டிஎன்பிஎஸ்சி விளக்கம்..தேர்வை ரத்து செய்யலாமா என ஆலோசனை
குரூப் 2 முதன்மைத் தேர்வில் குளறுபடி ஏற்பட வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தவறே காரணம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: குரூப் 2 முதன்மைத் தேர்வில் குளறுபடி ஏற்பட வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தவறே காரணம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2022ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.
இதற்கிடையே தேர்வின் காலை அமர்வில் மாநிலம் முழுவதும் சென்னை, கடலூர், சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டது. சென்னை, கடலூர், சேலம், தஞ்சை மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருந்தது. வினாத் தாள்களின் எண்களும் மாறி வந்ததால், தேர்வைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மதுரையில் நடந்த குரூப் 2 தேர்வு குளறுபடியின்போது கிடைத்த நேரத்தில், வெளியே வந்து புத்தகத்தை எடுத்தும், மொபைல் மூலமாகவும் விடைகளைப் பார்த்து தேர்வு எழுதியதாக தேர்வர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து காலை வினாத் தாள்கள் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதத்தை ஈடுசெய்யும் வகையில் மதியத் தேர்வை அரை மணி நேரம் தாமதமக, 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடத்த டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது.
இதனிடையே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிஎன்பிஎஸ்சி இன்று ஆலோசனை நடத்தியது. இதில் டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவர் முனியநாதன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ், கண்காணிப்பாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். பொதுவாக முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது வாழ்நாள் தடை விதிக்கப்படுவது வழக்கம் ஆகும். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தேர்வை ரத்து செய்யலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications