அடியோடு மாறுதே! ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மாறப்போகிறது.. முக்கிய பொருட்களின் விலை உயரும் அபாயம்?
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை முறைப்படுத்துவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் தனது அடுத்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதத்தில் தற்போதுள்ள நான்கு அடுக்குகளை மூன்று அடுக்குகளாகக் குறைக்கும் வகையில், 12% வரி விதிப்பை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரி விகிதங்களை முறைப்படுத்த ஆலோசனை
வரி விகிதங்களை முறைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வரும் அமைச்சர்கள் குழுவுக்கு (GoM) ஆலோசனை வழங்கும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் மத்தியில், 12% வரி விதிப்பு அடுக்கு இனி தேவையில்லை என்ற ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது. பொது மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை 5% வரி விதிப்பு அடுக்குக்கு மாற்றவும், மற்றவற்றை 18% வரி விதிப்பு அடுக்குக்கு மாற்றவும் வாய்ப்புள்ளது.
ஜூன் இறுதி அல்லது ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய நிதி அமைச்சர் மற்றும் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் (அல்லது மூத்த அமைச்சர்கள்) அடங்கிய இந்த அமைப்பு, டிசம்பர் 2024 க்குப் பிறகு இதுவரை கூடவில்லை. வரி விகிதங்களை முறைப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் விகிதத்தை எளிதாக்குவது போன்ற பிற சிக்கல்களையும் இந்த கவுன்சில் பரிசீலிக்கக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர்கள் குழு அமைப்பு
வரி விகிதங்களை முறைப்படுத்துவதற்கான அமைச்சர்கள் குழு (GoM), 2021 செப்டம்பர் 24 அன்று லக்னோவில் நடைபெற்ற 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முடிவின்படி அமைக்கப்பட்டது. வரி விகிதங்களை முறைப்படுத்துதல், வரி கட்டமைப்பை எளிதாக்குதல் மற்றும் வரி விதிப்பில் உள்ள குளறுபடிகளை சரிசெய்தல் ஆகியவை இதன் நோக்கமாகும். முதலில், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை இதன் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பின்னர், நவம்பர் 2023 இல், உத்தரப் பிரதேச நிதி அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா ஒருங்கிணைப்பாளரானார். அதன்பிறகு, பிப்ரவரி 27, 2024 அன்று பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி அதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
12% வரி விதிப்பு அடுக்கை நீக்குவதற்கு பெரும்பாலான மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் அமைச்சர்கள் குழு பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போதைய ஜிஎஸ்டி அமைப்பு
தற்போது, இந்தியாவில் நான்கு அடுக்கு ஜிஎஸ்டி அமைப்பு உள்ளது - 5%, 12%, 18% மற்றும் 28%. அத்தியாவசியப் பொருட்களுக்குக் குறைவான வரியும், ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக வரியும் விதிப்பது இதன் முக்கிய கொள்கையாகும். ஏழைகள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான unpack செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், உப்பு, பால், புதிய காய்கறிகள், கல்வி மற்றும் சுகாதார சேவைகள் போன்றவற்றுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படுகிறது.
12% வரி விதிப்பு அடுக்கில், கெட்டியான பால், மீன் முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் Caviar மற்றும் Caviar Substitutes, 20 லிட்டர் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர், வாக்கி டாக்கி, டாங்கிகள் மற்றும் பிற கவச வாகனங்கள், காண்டாக்ட் லென்ஸ்கள், சீஸ், பேரீச்சம்பழம் மற்றும் உலர் பழங்கள், உறைந்த காய்கறிகள், Sausages மற்றும் அதுபோன்ற இறைச்சி பொருட்கள், பாஸ்தா, ஜாம் மற்றும் ஜெல்லி, பழச்சாறு கலந்த பானங்கள், பூஜ்ஜியா உட்பட Namkeens, கறி பேஸ்ட், Mayonnaise, டூத் பவுடர், ஃபீடிங் பாட்டில்கள், தரைவிரிப்புகள், குடைகள், தொப்பிகள், சைக்கிள்கள், குறிப்பிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், பிரம்பு அல்லது மரத்தால் செய்யப்பட்ட அமைப்புகள், பென்சில்கள் மற்றும் கிரேயான்கள், சாக்கு மற்றும் பருத்தியால் செய்யப்பட்ட கைப்பை மற்றும் ஷாப்பிங் பேக், ₹1,000 க்கும் குறைவான காலணிகள், Diagnostic Kits, மற்றும் மார்பிள் மற்றும் கிரானைட் ஆகியவை அடங்கும்.
12% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் சேவைகளில், குறிப்பிட்ட கட்டுமானப் பணிகள், ஒரு நாளைக்கு ₹7,500 வரை உள்ள ஹோட்டல் அறைகள், விமானம் மூலம் பயணிகள் செய்யும் போக்குவரத்து (Economy வகுப்பைத் தவிர), சில வகையான Multimodal போக்குவரத்து, மற்றும் குறிப்பிட்ட Professional, Technical மற்றும் Business சேவைகள் ஆகியவை அடங்கும்.
நிபுணர்களின் கருத்து
12% வரி விதிப்பு அடுக்கை ரத்து செய்யும் யோசனைக்கு நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி கவுன்சிலின் வரவிருக்கும் கூட்டம் வரி விகிதங்களை முறைப்படுத்துவதில் கவனம் செலுத்தும். கவுன்சில் 12% அடுக்கை நீக்கிவிட்டு, மூன்று அடுக்கு ஜிஎஸ்டி கட்டமைப்பை எளிமையாக்க வாய்ப்புள்ளது. இந்த வரி மாற்றம் வரி விதிப்பை மேம்படுத்தவும், வகைப்பாடு தொடர்பான சர்ச்சைகளை குறைக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும் உதவும் என்றுள்ளார்.
வருவாய் இழப்பு இல்லாமல் இருப்பது அவசியம். ஏனெனில், 12% அடுக்கில் அதிக நுகர்வுள்ள பொருட்களும், தொழில்துறை உள்ளீடுகளும் உள்ளன. இவற்றை 5% அல்லது 18% அடுக்குகளுக்கு மாற்றுவது வருவாயில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே, கவனமாக மதிப்பீடு செய்து அணுகுவது அவசியம். பணவீக்கம் ஒரு கவலைக்குரிய விஷயம். 12% இலிருந்து 18% அடுக்குக்கு பொருட்களை மாற்றுவது, அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தக்கூடும். இது நுகர்வோருக்கு சுமையை அதிகரிக்கும். எனவே, கட்டம் கட்டமாக இந்த அணுகுமுறையை மேற்கொள்வது விலை உயர்வை குறைக்க உதவும்" என்றுள்ளனர் வல்லுனர்கள்.












Click it and Unblock the Notifications