கார், பைக் வாங்க போறீங்களா.. தீபாவளி வரை காத்திருங்க.. ஜிஎஸ்டி வரி பல மடங்கு குறைய போகிறது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ஆட்டோமொபைல் துறையின் நீண்டகாலக் கோரிக்கையான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, அனைத்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 28% ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் வருகின்றன. இதனால், வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதுடன், சந்தை வளர்ச்சியும் சவால் நிறைந்ததாக இருக்கிறது.

தற்போது, அனைத்து பயணிகள் வாகனங்களுக்கும் 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இத்துடன், எஞ்சின் கொள்ளளவு, நீளம், மற்றும் வாகன வகையைப் பொறுத்து 1% முதல் 22% வரை இழப்பீட்டு செஸ் (compensation cess) வரி விதிக்கப்படுவதால், மொத்த வரி 50% வரை அதிகரிக்கிறது. இருப்பினும், மின்சார வாகனங்களுக்கு மட்டும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுவதுடன், இழப்பீட்டு செஸ் இல்லை.

gst

வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி

இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டாலும், 350சிசி வரை எஞ்சின் கொள்ளளவு கொண்ட மாடல்களுக்கு இழப்பீட்டு செஸ் இல்லை. 350சிசி-க்கு மேல் உள்ள மாடல்களுக்கு 3% இழப்பீட்டு செஸ் வரி உண்டு.

ஜிஎஸ்டி கவுன்சிலால் அமைக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் குழுக்கள் (GoMs) இந்த வாரம் கூடி, மத்திய அரசின் வரி அமைப்பு திட்டத்தை மறுஆய்வு செய்யும். இந்தக் குழுக்களின் பரிந்துரைகள் பின்னர் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு சமர்ப்பிக்கப்படும்.

திருத்தப்பட்ட வரி கட்டமைப்பில், 5% மற்றும் 18% வரிகள் தக்கவைக்கப்பட்டு, 12% மற்றும் 28% வரிகள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது. இது பெரிய அளவில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்குப் பயனளிக்கும். எனினும், ஆடம்பர கார்கள் போன்ற சில பொருட்கள் (sin goods) 40% வரிக்கு உட்படுத்தப்படலாம்.

ஜிஎஸ்டியில் பெரிய சீர்திருத்தம்

79வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "இந்த தீபாவளி உங்களுக்கு இரட்டை தீபாவளியாக அமையப்போகிறது. நாட்டு மக்களாகிய உங்களுக்கு இந்த தீபாவளி ஒரு பெரிய பரிசாக அமையப்போகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் ஜிஎஸ்டியில் பெரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வரிச் சுமையைக் குறைத்து, வரி முறையை எளிதாக்கினோம்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இதை மறுஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்து மாநிலங்களுடன் விவாதித்து மறுஆய்வைத் தொடங்கஉள்ளோம்.. தீபாவளி அன்று அறிவிப்பு வரும்," என்றார்.

ஜிஎஸ்டி தொடர்பான மாற்றங்கள் குறித்து இதுவரை வெளிவந்த தகவல்கள்

மத்திய அரசு தற்போதுள்ள 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி அடுக்குகளை நீக்கிவிட்டு, 5% மற்றும் 18% ஜிஎஸ்டி வரி விகிதங்களை மட்டுமே வைத்திருக்க முன்மொழிந்துள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 28% வரி வரம்பில் உள்ள 90% பொருட்களுக்கான வரியை 18% ஆகக் குறைக்கவும் அரசு எதிர்பார்க்கிறது. அதேபோல, 12% அடுக்கில் உள்ள பொருட்கள் 5% அடுக்கிற்கு மாற்றப்படவும் முன்மொழியப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி - விலையில் மாற்றம்

இருப்பினும், புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பரப் பொருட்கள் போன்ற பொருட்களை உள்ளடக்கிய புதிய 40% அடுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த முன்மொழிவை பரிசீலிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெற வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி மறுசீரமைப்பு ஜிஎஸ்டி வசூலில் சிறிய எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆக்கபூர்வமான மற்றும் உள்ளடக்கிய உரையாடலை உருவாக்க, அமைச்சர்கள் குழுவிடம் (GoM) ஒரு முன்மொழிவு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் - எந்தெந்த துறைகளுக்கு பயனளிக்கும்

இந்த நடவடிக்கை விவசாயம், ஜவுளி, உரங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆட்டோமொபைல், கைவினைப்பொருட்கள், சுகாதாரம், காப்பீடு, கட்டுமானம், போக்குவரத்து போன்ற பொருளாதார துறைகளுக்கு பயனளிக்கும் என்று அரசு தரப்பு பதற்றம் தெரிவித்துள்ளது. புகையிலை மற்றும் பான் மசாலா போன்ற "பாவப் பொருட்கள்" புதிய 40% வரி அடுக்கிற்கு மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விகிதம் புகையிலை உட்பட ஏழு பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வைரங்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள், அதிக உழைப்பு தேவைப்படும் மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருட்கள், அதே விகிதத்தில் தொடர்ந்து வரி விதிக்கப்படும். இதற்கிடையில், பெட்ரோலியப் பொருட்கள் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆட்சியின் வரம்பிற்கு வெளியே தொடர்ந்து இருக்கும்.

பெரும்பாலும் இந்த வரி திருத்தம் காரணமாக பல அடிப்படை பொருட்களின் விலை குறையும். ஆனால் அத்தியாவசியமற்ற பொருட்களின் விலை பல மடங்கு உயரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+