ஜிஎஸ்டி வரியில் அதிரடி மாற்றம்.. எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? அதிகரிக்கும்? நோட் பண்ணுங்க
சென்னை: மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. இந்த நடவடிக்கை விவசாயம், ஜவுளி, உரங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆட்டோமொபைல், கைவினைப்பொருட்கள், சுகாதாரம், காப்பீடு, கட்டுமானம், போக்குவரத்து போன்ற பொருளாதார துறைகளுக்கு பயனளிக்கும் என்று அரசு தரப்பு பதற்றம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றம்
தற்போதுள்ள 12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்கிவிட்டு, 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே வைத்திருக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தினசரி பயன்பாட்டுப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி கட்டமைப்பை மத்திய அரசு திருத்த வாய்ப்புள்ளது. வரி அமைப்பைச் சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே இந்த ஜிஎஸ்டி விகிதங்கள் திருத்தப்படலாம். வெள்ளிக்கிழமை சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, "இந்த தீபாவளியை, இரட்டை தீபாவளியாக மாற்றுவேன்" என்று அறிவித்தார். ஜிஎஸ்டியில் ஒரு பெரிய சீர்திருத்தம் மூலம் தீபாவளி பரிசை மோடி உறுதியளித்தார்.
ஜிஎஸ்டி தொடர்பான மாற்றங்கள் குறித்து இதுவரை வெளிவந்த தகவல்கள்
மத்திய அரசு தற்போதுள்ள 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி அடுக்குகளை நீக்கிவிட்டு, 5% மற்றும் 18% ஜிஎஸ்டி வரி விகிதங்களை மட்டுமே வைத்திருக்க முன்மொழிந்துள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 28% வரி வரம்பில் உள்ள 90% பொருட்களுக்கான வரியை 18% ஆகக் குறைக்கவும் அரசு எதிர்பார்க்கிறது. அதேபோல, 12% அடுக்கில் உள்ள பொருட்கள் 5% அடுக்கிற்கு மாற்றப்படவும் முன்மொழியப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி - விலையில் மாற்றம்
இருப்பினும், புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பரப் பொருட்கள் போன்ற பொருட்களை உள்ளடக்கிய புதிய 40% அடுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த முன்மொழிவை பரிசீலிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெற வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி மறுசீரமைப்பு ஜிஎஸ்டி வசூலில் சிறிய எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆக்கபூர்வமான மற்றும் உள்ளடக்கிய உரையாடலை உருவாக்க, அமைச்சர்கள் குழுவிடம் (GoM) ஒரு முன்மொழிவு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் - எந்தெந்த துறைகளுக்கு பயனளிக்கும்
இந்த நடவடிக்கை விவசாயம், ஜவுளி, உரங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆட்டோமொபைல், கைவினைப்பொருட்கள், சுகாதாரம், காப்பீடு, கட்டுமானம், போக்குவரத்து போன்ற பொருளாதார துறைகளுக்கு பயனளிக்கும் என்று அரசு தரப்பு பதற்றம் தெரிவித்துள்ளது. புகையிலை மற்றும் பான் மசாலா போன்ற "பாவப் பொருட்கள்" புதிய 40% வரி அடுக்கிற்கு மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விகிதம் புகையிலை உட்பட ஏழு பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வைரங்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள், அதிக உழைப்பு தேவைப்படும் மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருட்கள், அதே விகிதத்தில் தொடர்ந்து வரி விதிக்கப்படும். இதற்கிடையில், பெட்ரோலியப் பொருட்கள் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆட்சியின் வரம்பிற்கு வெளியே தொடர்ந்து இருக்கும்.
பெரும்பாலும் இந்த வரி திருத்தம் காரணமாக பல அடிப்படை பொருட்களின் விலை குறையும். ஆனால் அத்தியாவசியமற்ற பொருட்களின் விலை பல மடங்கு உயரும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications