கூடுவாஞ்சேரி டூ வண்டலூர்.. பரனூர் சுங்கச்சாவடி கட்டணம் பாருங்க.. செங்கல்பட்டில் விழுந்த மேஜர் செய்தி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பரனூர் சுங்கச்சாவடி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இதுகுறித்து மத்திய தணிக்கை அறிக்கையும் வெளியாகி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது... சென்னையில் இருந்து வெளியே சென்றாலும், அல்லது சென்னை நகருக்குள் வாகனங்கள் வந்தாலும், இந்த கட்டணம் கறாராக வசூலிக்கப்படுகிறது.
வழக்கமாக, 60 கிலோ மீட்டருக்கு இடையில் இருக்கும் சுங்கச் சாவடிகளை ஏற்க மாட்டோம் என்றும் இது மிகப்பெரிய விதிமீறல் என்றும் தமிழ்நாட்டை சார்ந்த எம்பிக்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.. ஆனாலும், இதுவரை பெரிதாக எந்த மாற்றமும் நடக்கவில்லை என்கிறார்கள்..

வாகன ஓட்டிகள்: தமிழ்நாட்டில் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இருக்கக்கூடிய அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றிடுவோம் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் உறுதியாக தெரிவித்தும்கூட, நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், காலாவதியான சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக்காக 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்ற நெடுஞ்சாலைத்துறை அரசாணை உள்ளது என்றாலும், அந்த நடைமுறையை இதுநாள் வரை செயல்படுத்தப்படவில்லை என்ற ஆதங்கமும் நிலவிவருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் இயங்கிவருகிறது, இருந்தாலும் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையில் 55 சதவீத விபத்துக்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது...
சுங்கச்சாவடிகள்: அதனால், சுங்கச்சாவடிகளை கண்காணிக்க தனிக்குழு ஒன்று அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோள்களும், தமிழக அரசுக்கும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இப்படி கட்டண வசூலில் உள்ள சுங்கச்சாவடிகளில் , மிக முக்கியமானது, செங்கல்பட்டு அருகே செயல்பட்டு வரும் பரனூர் சுங்கச்சாவடியாகும். எப்போதுமே இந்த சுங்கச்சாவடியில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும்.. அதனால்தான், சுங்கச்சாவடிகளில் போதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
நெடுஞ்சாலை ஆணையம்: இந்த நிலையில், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க வரியை வசூலிப்பதில் உள்ள வீடுகளை முறையாக கடைபிடிக்காமல் வாகன ஓட்டிகளிடம் அதிகப்படியான கட்டணங்களைச் வசூல் செய்து இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
4 வழிச்சாலையை மேம்படுத்தும்போது கட்டணத்தை மாற்றி அமைக்காமல், கட்டணத்தில் 75 சதவீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 5 சுங்கச்சாவடிகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாம்.
இந்த பரனூர் சுங்கச்சாவடியில் 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக 2 பிரிவுகளாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பமானது.. இதில் முதல் திட்டப்பணி இரும்புலியூர் முதல் வண்டலூர்வரை 2.3 கி.மீட்டர் வரை நடந்து, 2020-ம் ஆண்டு பணிகள் முடிந்தது. 2ம் திட்டப்பணி கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் முதல் வண்டலூர் முதல் கூடுவாஞ்சேரி வரை 5.3 கி.மீ வரையும் நடந்தது.

சுங்கக்கட்டணம்: 2ம் திட்டப்பணி மார்ச் 2021-ம் வருடமும் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் இந்த பாதையில் சுங்கக்கட்டணத்தை 75 சதவீதமாகக் சுங்கச்சாவடி குறைக்கவில்லை. மாறாக, கடந்த 2018, ஆகஸ்டு முதல், 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டுமே ரூ.6.54 கோடி அளவுக்கு அதிகமான வசூல் செய்திருக்கிறதாம்.
2017- முதல் 2021 வரை இந்த பரனூர் சுங்கச்சாடியில், விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் ரூ. 22 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாம். அதேபோல, பாலத்திற்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்று விதியிருந்தும்கூட, பாலத்திற்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது..
கழிவறைகள்: அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இருபுறங்களிலும் கழிவறை கட்டப்பட வேண்டும் என்ற உத்தரவு இருந்தும்கூட, இந்த சுங்கசாவடியில் கழிவறை இல்லையாம்.
அதாவது மொத்தமுள்ள 41 சுங்கச்சாவடிகளில் பரனூர் உட்பட 13 சுங்கச்சாவடிகளில் ஒரு புறத்தில் மட்டும் பாத்ரூம் இருக்கிறதாம். அப்படியே கழிவறைகள் இருந்தாலும்கூட அவைகள் சரியாக பராமரிக்கப்படவில்லையாம். இந்த விவரங்கள் எல்லாம் மத்திய தணிக்கை அறிக்கையில் வெளியாகி உள்ளது.. இதைக்கேட்டு வாகன ஓட்டிகள் மேலும் நொந்து போயுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications