கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற குஜராத் ராஜ்யசபா எம்பி அபய் பரத்வாஜ் சென்னையில் காலமானார்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலங்களவை எம்பி அபய் பரத்வாஜ் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் அபய் பரத்வாஜ். இதனால் கடந்த ஜூலை மாதத்தில் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர் அபய் பரத்வாஜ். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் அவர் ராஜ்கோட்டில் ஒரு பேரணியில் பங்கேற்றார்.

அதன்பிறகு அவருக்கு செப்டம்பர் மாதம் கொரோனா பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து செப்டம்பர் 15-ஆம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
ராஜ்கோட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு மாதமாக அபய் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து இரு மாதங்களுக்கு முன்னர் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அபய் இன்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில், குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய் பரத்வாஜ் கோவிட் தொற்று, நிமோனியாவால் பாதிக்கப்பட்டார்.
இதனால் அவர் இங்கு அக்டோபர் 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது நுரையீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் அவரது உள் உறுப்புகளும் அதிகமாக சேதமடைந்துவிட்டது. இதனால் அவர் இன்று மாலை காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி உயிரிழந்தார். ஒரே வாரத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 2 மாநிலங்களவை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications