"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம்
சென்னை: கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் சிங்கப்பெண் அதிரடி படை எங்கே போனது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில்
எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?
என்ன தான் செய்கிறது காவல்துறை?
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?
இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்?
"அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்" என்று டயலாக் பேசிய முதல்வரே... இதுதான் அந்த மாற்றமா?
குழந்தை பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது Show காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, Seriousness புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில் ஈடுபடுமாறு இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அது போல் இந்த சம்பவத்திற்கு அன்புமணியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்திற்கு அருகில் வசிக்கும் வட மாநிலக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்றரை வயது பெண் குழந்தையை 4 மனித மிருகங்கள், நேற்று மாலை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பயனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தது. குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது. பால்மனம் மாறாத குழந்தையை சீரழித்த நான்கு மனித மிருகங்களும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் என்று தெரியவந்துள்ளது. நால்வரும் கஞ்சா போதையில் தான் இந்தக் கொடிய குற்றத்தை நிகழ்த்தியுள்ளனர். பால்மனம் மாறாத மூன்றரை வயது குழந்தையை 4 மனித மிருகங்கள் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.
இதே கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் தான் கடந்த ஆண்டு ஜூலை 12-ஆம் நாள் நான்காம் வகுப்பு பயிலும் சிறுமியை, ஆந்திராவிலிருந்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மனித மிருகம் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தான். இதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர் போராட்டம் நடத்திய பிறகு தான் குற்றவாளி கைது செய்யப்பட்டான். அந்த வழக்கின் விசாரணை 5 மாதங்களில் முடிக்கப்பட்டு, குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அதே பகுதியில் இன்னொரு கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
ஆரம்பாக்கத்தில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்தது. அதை மனதில் கொண்டாவது அந்தப் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை ஒழித்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான பாதுகாப்பை மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தோல்வி அடைந்ததன் விளைவு தான் மூன்றரை வயது குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமை ஆகும்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம், அதனால் நிகழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை அரசும், காவல்துறையும் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுவதை அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இப்பவாது யோசிங்க எடப்பாடி.. அதிமுக தொண்டர்களின் பல்ஸை பிடித்த ஆதவ் அர்ஜுனா -
வென்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு.. கும்மிடிப்பூண்டி சிறுமி வழக்கு.. விஜய்க்கு உதயநிதி வார்னிங் -
அரசுனு ஏதாவது இருக்கா.. கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் கொடுமை சம்பவம்.. கனிமொழி காட்டமான கேள்வி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications