கொடைக்கானலுக்கு டூர் போன இடத்தில் இப்படியா? கன்னோடு சுற்றிய ப்ளூ சட்டை GenZ! பாடமெடுத்த பறக்கும் படை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் சுற்றுலா வந்த இளைஞர்களின் வாகனத்தில் இருந்த துப்பாக்கியால் பரபரப்பு ஏற்பட்டது. பறக்கும் படை சோதனையில் தப்பி சென்ற வாகனத்தை விரட்டி பிடித்த காவல் துறையினர், துப்பாக்கி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடக போன்ற பல்வேறு வெளிமாநிலங்களிருந்து விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவது வழக்கம்.
இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், ரோஜா தோட்டம், பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய இடங்களில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் கூட்டமாக இயற்கை அழகை கண்டு ரசித்தும் புகைப்படங்களை எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியடைவர்.

மேலும் சுற்றுலாப்பயணிகள் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச் சாலையை சுற்றி சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 5 பறக்கும் படையினர் முக்கிய பிரதான சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வழக்கம் போல பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது தென்காசி நாவலூர் பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த நான்கு இளைஞர்கள் தார் வாகனத்தில் வந்துள்ளனர்.
அப்போது அவர்களின் அவர்களின் வாகனத்தை சோதனை செய்ய பறக்கும் படையினர் நிறுத்த முயற்சி செய்த போது வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து பறக்கும் படையினர் கொடைக்கானல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து வந்த காவல் துறையினர் சீனிவாசபுரம் பகுதியில் அந்த சுற்றுலா வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்த போது துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து துப்பாக்கி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் இளைஞர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர்கள் வாகனத்தில் துப்பாக்கி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக சுற்றுலா வாகனத்தில் இருந்த துப்பாக்கி டம்மி என்று காவல் துறையினர் தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications