Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘குணா’ ரிட்டர்ன்ஸ்! மூலக்கதை எப்படி வந்தது? ‘அபிராமி’ ரோஷினி எங்கே போனார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் 'குணா' படம் ரீ ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில், அந்தப் படம் பற்றிய பழைய கால நினைவுகள் என்ன? அன்றைக்கு அது வெற்றிப் படமாக இருந்ததா? என்பன போன்ற மலரும் நினைவுகளைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் மூலம் வெளியான சில நாட்களிலேயே மூட்டைக் கட்டி வைக்கப்பட்ட 'குணா' படம் மீண்டும் மறு உயிர்பெற்றது. கமல்ஹாசன் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இன்று கொண்டாடப்படும் 'குணா' வெளியான காலத்தில் வெற்றிப் படம் இல்லை. தீபாவளி பண்டிகையை ஒட்டி கமலின் 'குணா'வும் ரஜினியின் 'தளபதி'யும் ஒரு நேரத்தில் வெளியானது. அந்தப் போட்டியில் 'தளபதி'யின் வெற்றியில் 'குணா' கொஞ்சம் அல்ல; மிக அதிகமாகவே பாதிக்கப்பட்டது.

kamal haasan guna movie

அதுவரை நடிப்பு என்றால் கமல்தான் என்ற பெயரை லேசாக அசைத்துப் பார்த்தது 'தளபதி'. சொல்லப்போனால் இந்தப் படத்தை விட கமல்ஹாசன் மிக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திலிருந்த திரை ரசிகர்களுக்கு நான்கு சுவருக்கு கமல்ஹாசன் சுற்றிச் சுற்றி வருவதைப் பார்க்கும் அளவுக்குப் பொறுமை இல்லாமல் இருந்தது. ஆகவே, 'குணா'வை முந்திக் கொண்டு 'தளபதி' வசூல் வேட்டையில் முன்னே வந்துவிட்டது. ஆனால், இன்று 34 ஆண்டுகள் கழித்து , திரை ரசிகர்கள் மஞ்சுமெல் பாய்ஸ் மூலம் குணாவை மீண்டும் பார்க்க விருப்பம் காட்டியிருந்தனர். அதனையடுத்து ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.

அந்தக் காலத்தில் குணாவைப் பற்றிய நினைவுகள் என்ன? அதைப் பற்றிப் பேசிய படத்தின் இயக்குநர் சந்தான பாரதி, "34 ஆண்டுகள் முன்பாக படம் வெளியானபோது பெரிய கமர்ஷியல் ஹிட் ஆகவில்லை. ஆனால் 'குணா'வுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. இதன் மூலக்கதை சாப் ஜான் எழுதினார். அதன்பின் நான், பாலகுமாரன், கமல்ஹாசன் உட்கார்ந்து கதையை விவாதித்து விரிவாக்கினோம். கதைக்காகத் தேடும் போது 'குணா' குகை சிக்கியது. மொத்தம் 15 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடத்தினோம். காலை டிபன் முடிந்து குகைக்குள் இறங்கினால், படப்பிடிப்பு முடித்துச் சாப்பிட மாலை 5 மணி ஆகிவிடும். Devils Kitchen பின்னாடி இருந்த குகையில்தான் எடுத்தோம். அதுவே பிறகு குணா குகை அழைக்கும் அளவுக்குப் பிரபலமாகிவிட்டது.

kamal haasan guna movie

உள்ளே வெளிச்சம் கிடையாது. நிறைய லைட்ஸ் வைக்க முடியாது. இருக்கின்ற வெளிச்சத்தில் சில லைட்ஸ் மட்டும் பயன்படுத்தினோம். பல இடங்களில் மெழுகுவர்த்தி கொளுத்திக் கொண்டோம். தீ பந்தம். இப்படித்தான் படப்பிடிப்பு நடந்தது. 'கண்மணி அன்போடு காதலன்' பாடலை மூன்று குகைகளில் எடுத்தோம். அதில் நடனக் காட்சிகளை கமல்ஹாசனும் யோசித்து புது மாதிரியாகச் செய்தார். அபிராமியாக நடித்த ரோஷினி. அந்தப் படம் முடிந்த பிறகே அவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க விருப்பம் இல்லை என்பதைச் சொல்லிவிட்டார். பணக்கார குடும்பம் அவர். தேவதை போல ஒரு பெண் வேண்டும் என்பதால் ரோஷினியை போட்டோம். அதுவும் புதுமுகமாக இருக்கவேண்டும் என்று தேடிப் பார்த்து அவரைக் கண்டுபிடித்துப் போட்டோம்" என்கிறார்

இந்தப் படத்தின் மூலகத்தை சாப்ஜான்தான் என்று சந்தான பாரதி சொன்னார் இல்லையா? அவர் இந்தக் கதையை எப்படி யோசித்தார்? அதைப்பற்றி சாப்ஜான் என்ன சொல்லி இருந்தார்? அவர், "அன்றைக்கு இப்படி இரு கதையை எழுதி சிலரிடம் சொன்னபோது, 'உனக்கு என்ன பைத்தியமா? இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கு?' என்று கேட்டார்கள். என் வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்கள் அப்படி ஒரு கதையை எழுத உதவியாக இருந்தன.

ஒருவன் பிரதிபலன் பாராமல் கொடுக்கும் அன்பு எப்படியானது என்பதைத்தான் அந்தக் கதை சொன்னது. ஒருநாள் கொச்சி காபி ஷாப்பில் உட்கார்ந்து காலை 5 மணிக்கு ஒரு சிறு காகிதத்தில் எழுதினேன். தங்கு தடை இல்லாமல் அதைத் தானாக எழுதினேன். எந்த முன் முடிவுகள் இல்லாமல் எழுதினேன். அன்பு என்றால் என்ன என்பதைப் பற்றி ஒரு விசாரணைதான் 'குணா' கதை" என்று கூறியிருந்தார்.

kamal haasan guna movie

இந்தப் படத்திற்கு 'மதிகெட்டான் சாலை' என்றுதான் முதலில் தலைப்பு வைத்திருந்தனர். பின்னர் குகைக்குப் போய் படப்பிடிப்பு நடத்திய போதுதான் 'குணா' என்று புதிய டைட்டில் மாட்டியது. இந்தக் குகைக்கான லொகேஷனை சந்தான பாரதியும் கமல்ஹாசனுமே தேடிப் போய் கண்டுபிடித்தனர். அப்போதே அந்தக் குகையில் சறுக்கி விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது என வழிகாட்டியவர் சொன்னதைக் கேட்ட கமலுக்கு, அதன் உள்ளே இறங்கிப் பார்க்க வேண்டும் என சவால் செய்துள்ளார். யார் இறக்குவது என யோசித்த போது கமல்ஹாசனே உள்ளே குதித்து குகையை ஆராய்ந்து தேர்வு செய்துள்ளார்.

இவ்வளவு நினைவுகளைக் கிளப்பி இருக்கும் 'குணா' இப்போது பெரிய திரையில் பார்க்கக் கூடிய வாய்ப்பு பலருக்கும் அமைந்துள்ளது. இந்த முறை வெளியான காலத்தில் செய்த வசூலைவிட அதிகம் செய்யுமா? அதற்கு மஞ்சுமெல் பாய்ஸ் கொடுத்த விளம்பரம் கைகொடுக்குமா? பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+