நெகிழ்ந்துபோன ஜி.வி.பிரகாஷ்.. பாலஸ்தீனத்திற்காக உயிரை விட்ட அமெரிக்க வீரர்.. “மாமனிதன்” என புகழாரம்
சென்னை: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு அமெரிக்காவும் முழு ஆதரவு அளித்து வருகிறது. இதனை கண்டித்து, பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் சமீபத்தில் தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மறைவுக்கு ஜி.வி.பிரகாஷ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000 பேரின் உயிரை எடுத்திருக்கிறது. போரை தடுக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், இஸ்ரேல் அதை மதிக்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதெல்லாம், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்ய வைத்திருந்தது.

இந்நிலையில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், சுதந்திரமான பாலஸ்தீனத்தை வலியுறுத்தியும் அமெரிக்காவின் விமானப்படை வீரர் ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி பகுதியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே இந்த தீக்குளிப்பு சம்பவம் நடந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்று, வழக்கம்போல பணிக்கு வந்த விமானப்படை வீரர் தூதரகத்தின் வாசலுக்கு வந்து,
"இனிமேலும் நான் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன். நான் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன். பாலஸ்தீனத்தை விடுவிக்கவும்" என்று கூறி தனது உடலில் தீயை வைத்துக்கொண்டார். தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில், "பாலஸ்தீனத்தை விடுவிக்கவும், பாலஸ்தீனத்தை விடுவிக்கவும்" என்று தொடர்ந்து முழக்கமிட்டிருக்கிறார். இந்த சம்பவத்தின்போது உடன் பணியாற்றி சில அதிகாரிகள், தீயை அணைத்துள்ளனர்.
யார் இந்த விமானப்படை வீரர்?: இது குறித்து புலனாய்வு விசாரணையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, தற்கொலைக்கு முயன்ற நபர் அமெரிக்கா விமானப்படையில் பணியாற்றி வரும் வீரர் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவரது பெயர் ஆரோன் புஷ்னெல். இவர் கடந்த 2020ம் ஆண்டு முதல் அமெரிக்க விமானப்படையில் இருந்து வந்திருக்கிறார்.
தகவல் தொழில்நுட்ப பிரிவில், கிளையன்ட் சிஸ்டம்ஸ் டெக்னீஷியனாகவும், DevOps இன்ஜினியராகவும் பணிபுரிந்திருக்கிறார். கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் சதர்ன் நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகத்தில் பயின்றிருக்கிறார். தீக்குளிப்பு சம்பவத்தையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான கண்டனங்களை மேலும் வலுவடைய செய்திருக்கிறது.
இந்நிலையில் இவரது மறைவுக்கு பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் அஞ்சலி செலுத்தியுள்ளார். தனது x சோஷியல் மீடியா தளத்தில், "மனிதம் காக்க தன்னுயிர் ஈந்த மாமனிதனுக்கு என் கண்ணீர் அஞ்சலி. தற்கொலைகள் எந்த சூழலிலும் ஏற்புடையதல்ல" என்று கூறியுள்ளார்.
பின்னணி என்ன?: பாலஸ்தீனத்தில் தொடக்கத்தில் அகதிகளாக குடியேறிய யூதர்கள், பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க தொடங்கினர். பாலஸ்தீனத்திற்குள் உருவான இஸ்ரேல் மெல்ல மெல்ல வளர்ந்து முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் குரல் கொடுக்க, பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் உருவாக தொடங்கின. இதில் ஒன்றுதான் ஹமாஸ்.
கடந்த 2005ம் ஆண்டு காசா முனை பகுதியை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் அங்கிருந்து விலகிக்கொண்டது. இதனையடுத்து காசாவில் ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றியது. அப்போதிலிருந்து இரு நாடுகளுக்கும் மோதல் போக்கு தீவிரமடைந்தது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications