H 1B Visa: அமெரிக்காவை நம்பியது போதும்.. இந்தியர்களே இந்தியா வாங்க - ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச் 1 பி விசா ரூல்ஸை மாற்றி உள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று ஐடி துறை உள்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்களை குறிவைத்து அவர் இந்த செயலை செய்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தான் ‛‛இதுதான் நேரம். அமெரிக்காவில் எச் 1பி விசாவில் வசிப்போர் இந்தியா திரும்ப வாருங்கள். உங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப 5 ஆண்டுகள் ஆகலாம், ஆனால் அது உங்களை வலிமையாக்கும். பயத்தில் வாழாதீர்கள். துணிச்சலாக முடிவு எடுங்கள். உங்களால் சிறப்பாக செயல்பட முடியும்'' என கூறியுள்ளார்.

அமெரிக்காவில் ஐடி உள்பட பல முன்னணி துறைகளில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் டாப் பதவிகளில் உள்ளனர். அதேபோல் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தற்காலிகமாக தங்கி பணியாற்றி வருகின்றனர். வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

h-1b-visa-row-indians-who-on-an-h-1b-visa-in-america-come-back-home-says-zoho-founder-sridhar-vemb

இந்த விசாவில் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி பணி செய்ய முடியும். அதன்பிறகு 3 ஆண்டுகள் வரை விசா காலத்தை நீட்டித்து கொள்ள முடியும். மேலும் பலரும் இந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவின் குடியுரிமை பெற்று அங்கேயே வசிக்க தொடங்கி நிறுவனங்களில் உயர் பதவிகளை எட்டிப்பிடிக்கின்றனர்.

இப்படியான இந்த எச் 1 பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) உயர்த்தும் உத்தரவில் அதிபர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அமெரிக்காவை எடுத்து கொண்டால் எச் 1 பி விசா திட்டத்தில் பயனடைந்தவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள். இதனால் டிரம்ப் இந்தியர்களை குறிவைத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிபுணர்கள் கூறி உள்ளனர்.

இந்நிலையில் தான் எச் 1பி விசா தொடர்பாக அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஜோஹோ ஐடி நிறுவனத்தின் நிறுவனரும், அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார். எச் 1பி விசாவில் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் இந்தியா திரும்பி வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பிரிவினையின் போது தங்கள் குடும்பங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது என்பது குறித்து சிந்து (பாகிஸ்தானின் ஒருபகுதி) நண்பர்களிடமிருந்து பல கதைகளை கேட்டிருக்கிறேன். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பினர். சிந்து மக்கள் இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.

அதேவேளையில் நான் இப்போது இந்த விஷயத்தை சொல்வதற்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் H1-B விசாவில் உள்ள இந்தியர்களுக்கு அதற்கான நேரமாக இருக்கலாம். அமெரிக்காவில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பி வாருங்கள். உங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப 5 ஆண்டுகள் ஆகலாம், ஆனால் அது உங்களை வலிமையாக்கும். பயத்தில் வாழாதீர்கள். துணிச்சலாக முடிவு எடுங்கள். நீங்கள் நன்றாக செயல்படுவீர்கள்'' என்று கூறியுள்ளார்.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டப்படிப்பை முடித்தார். அமெரிக்காவில் பணியாற்றினார். அதன்பிறகு தான் தமிழகம் வந்து ஜோஹோ நிறுவனத்தை நிறுவினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+