சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோயில் நிலம் வக்ப் வாரிய சொத்தா? அதெப்படி.. மோசடியை முறியடிப்போம் - எச்.ராஜா சபதம்

Google Oneindia Tamil News

சென்னை: திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்திற்கு உட்பட்ட நிலங்கள் வக்ப் வாரியத்துக்கு உட்பட்டது என பதிவாளர் அறிவித்துள்ளதற்கு பாஜகவை சேர்ந்த எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அருகே அமைந்து இருக்கிறது திருச்செந்துறை கிராமம். இப்பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்ற நபர் 1 ஏக்கர் 2 செண்ட் பரப்பளவு நிலத்தை விற்க ராஜராஜேஸ்வரி என்ற நபருடன் ஒப்பந்தம் செய்தார்.

ரூ.3.50 லட்சத்துக்கு பத்திரப்பதிவு செய்ய திருச்சி 3ம் எண் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்ற அவரிடம், இந்த நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்றும் இதை பதிவு செய்ய முடியாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு! நாளை முதல் 5 மாதம் மூடப்படும் என அறிவிப்பு! போக்குவரத்தில் மாற்றம் திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு! நாளை முதல் 5 மாதம் மூடப்படும் என அறிவிப்பு! போக்குவரத்தில் மாற்றம்

பாஜக எதிர்ப்பு

பாஜக எதிர்ப்பு

இந்த நிலத்தை பதிவு செய்ய வேண்டும் என்றால் சென்னையில் உள்ள வக்பு வாரியத்துக்கு சென்ற தடையில்லா சான்றிதழை பெற வேண்டும் என சார்பதிவாளர் முரளி தெரிவித்து இருக்கிறார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கோயில்கள், வீடுகள், விவசாய நிலங்களை கொண்ட இப்பகுதி வக்பு வாரியத்துக்கு எப்படி சொந்தமாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பதிவுத்துறை அறிவிப்பு

பதிவுத்துறை அறிவிப்பு

இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "3 ஆம் எண் இணைச் சார்பதிவக எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் ஒரு சில சர்வே எண்கள் மற்றும் திருச்செந்துறை கிராமம் சர்வே எண்கள் முழுவதும் திருச்சி டவுன் எல்லைக்கு உட்பட்ட ஒரு சில T.S.No-களில் கட்டுப்பட்ட சொத்துக்கள் தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று வக்ப் வாரியம் நமது அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பியுள்ளது.

வக்ப் வாரிய சொத்து

வக்ப் வாரிய சொத்து

ஆவணம் பதிவுக்கு வரும் முன் மேற்பட்ட சர்வே எண்களில் வக்ப் வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளதா? என சரிபார்த்த பின் ஆவணங்களை தயார் செய்து ஆவணப்பதிவுக்கு எடுத்து வருமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. வக்ப் வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் அடங்கிய கோப்பு 3 நீர் இணை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

எச்.ராஜா எதிர்ப்பு

எச்.ராஜா எதிர்ப்பு

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டு உள்ள பதிவில், "திருச்சென்துரை கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே நம்பரும் வக்ஃப் போர்டுக்கு சொந்தமாம். வக்ஃப் போர்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பும். உடனே பதிவாளர் அதை மக்களுக்கு அறிவிப்பாராம். எப்படி சாத்தியம். கோவில் நிலம் எப்படி வக்ஃப் நிலமானது. மோசடியை முறியடிப்போம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

English summary
H.Raja condemned that how Temple land become Waqf property
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X