கனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்
Recommended Video

சென்னை: பட்டேல் சிலை விவகாரம் தொடர்பாக, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா நடுவே டிவிட்டரில் காரசார வாக்குவாதம் நடைபெற்றது.

கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு வழங்கிய தொகை குறித்து கனிமொழி டிவிட்டரில் விமர்சனம் செய்திருந்தார். அவர் வெளியிட்ட ட்வீட்டில்,
உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்! #GajaCycloneRelief
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 2, 2018
"உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்! " இவ்வாறு கூறியிருந்தார்.
இதனால் எச்.ராஜாவிற்கு வந்ததே பார்க்கலாம் கோபம். அவர் வெளியிட்ட ட்வீட்டில்,
குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக் கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா @KanimozhiDMK
— H Raja (@HRajaBJP) December 3, 2018
"குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக் கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், கனிமொழி ட்வீட்டின் மையக் கருத்து, என்பது மத்திய அரசு போதிய புயல் நிவாரண தொகை தரவில்லை என்பதுதான். அதற்கு எச்.ராஜா பதில் சொல்லாமல், சிலைக்கு உயிருள்ளதா இல்லையா என்று கேட்டதோடு, பெரியார் சிலைகள் பற்றி கூறி விஷயத்தை திசை திருப்பியுள்ளார். இப்போது திமுக மற்றும் பாஜக நெட்டிசன்கள், பட்டேல் சிலையா, பெரியார் சிலையா என்று தங்களுக்குள் இதுபற்றி விவாதித்து வருகிறார்களே தவிர, புயல் நிவாரணத்தை மறந்துவிட்டனர். இல்லை, இல்லை.. மறக்கடிக்கப்பட்டுவிட்டனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications