சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொன்பரப்பியில் நடந்தது ஜாதிச் சண்டை இல்லைங்க.. இரு கட்சிகளுக்கிடையிலான பிரச்சினை.. எச். ராஜா!

பொன்பரப்பி கலவரம் குறித்து எச் ராஜா புது விளக்கம் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பொன்பரப்பியில் நடந்தது ஜாதிச் சண்டை இல்லை - எச். ராஜா!-வீடியோ

    சென்னை: பொன்பரப்பியில் நடந்தது சாதி சண்டையே கிடையாது என்று சொல்லிவிட்டார் எச்.ராஜா! அங்கு நடந்தது இரு கட்சிகளிடையேயான பிரச்சனைதான் என்றும் புது விளக்கம் அளித்துள்ளார்.

    ஓட்டு போட்டது முதல் எச்.ராஜாவை செய்தியாளர்கள் சந்திப்புகளில் பெரும்பாலும் காணவில்லை. ஓய்வில் இருந்தவர் இப்போது காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

    H Raja says about Ponparappi Issue in Karaikudi

    ஆனால் எடுத்த எடுப்பிலேயே முக ஸ்டாலினை வாரினார். அப்போது சொன்னதாவது: "எதிர்கட்சிகளின் அங்கீகாரத்திற்கு இழுக்காக உள்ளார் முக ஸ்டாலின். பிரதமரை களவாணி என இழிவாக பேசிய ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    தமிழக வேலை தமிழருக்கே.. தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம்.. பெண்கள் உள்பட 400 பேர் கைது தமிழக வேலை தமிழருக்கே.. தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம்.. பெண்கள் உள்பட 400 பேர் கைது

    பொன்பரப்பியில் நடத்தது ஒன்றும் சாதி கலவரம் இல்லை. பாமக, விடுதலை சிறுத்தை ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேயான பிரச்சனைதான் அது. இரு கட்சிகளின் அரசியல் மோதல். இதிலே எங்கு ஜாதி வந்தது?

    இஸ்லாமியர்களின் அமைப்பையே தமிழகத்தில் தடை செய்ய வேண்டும். இந்துக்களின் மனதை புண்படுத்தி வரும் கி.வீரமணி இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மழை வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜை என தமிழக அரசு போட்ட அரசாணையை வரவேற்கிறேன்" என்றார்.

    English summary
    In Karaikudi, H Rajas new explanation about Ponarappi Issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X