கைதி நம்பர் 1440-ஐ உடனே ஜெயிலுக்கு அனுப்புங்க.. இனியும் நாடகமாடுனா ஆபத்து.. எச்.ராஜா பரபர!
சென்னை: கைதி நம்பர் 1440 உடனடியாக சிறைக்கு அனுப்பப்பட்ட வேண்டும். இன்னமும் தமிழக அரசு நாடகமாடுமானால் அது தமிழ்நாடு அரசுக்கும் காவேரி மருத்துவமனைக்கும் ஆபத்தாக முடியும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகிய இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் 3வது நீதிபதிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நேற்று தீர்ப்பளித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டும் எனத் தீர்ப்பளித்தார்.
மேலும், அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்தால், காவலில் எடுக்க வேண்டியது அவசியம். காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோருவது அவர்களின் உரிமை. ஆகவே அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது. கைது சட்டப்படியானது; நீதிமன்ற காவல் சட்டப்படியானது. ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல எனத் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது என 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் உறுதி செய்தார். அமலாக்கத்துறை சட்டப்படி தான் கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. இனிமேலாவது திராவிடியன் ஸ்டாக் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். கைதி நம்பர் 1440 உடனடியாக சிறைக்கு அனுப்பப்பட்ட வேண்டும்.
இன்னமும் தமிழக அரசு நாடகமாடுமானால் அது தமிழ்நாடு அரசுக்கும் காவேரி மருத்துவமனைக்கும் ஆபத்தாக முடியும். கைதி நம்பர் 1440 காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் ஒரு மருத்துவமனையை அது புதிதாக வாங்கியுள்ளதாம். அதன் பெயர் என்ன? தெரிந்தவர்கள் கூறவும். 40 நாட்களாக ஒரு குற்றவாளியை காப்பாற்ற முயற்சி செய்து தமிழ்நாடு அரசு தோல்வியடைந்துள்ளது. தமிழகத்திற்கு தலைகுனிவு இன்று" என விமர்சித்துள்ளார்.
முன்னதாக, எச்.ராஜா பதிவிட்ட ட்வீட்டில், திமுகவின் ஆட்டம் இன்னுமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவமனையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா? எனக் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications