சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுக்குதான், ஊருக்குள்ள ஒரு எச். ராஜா இருக்கணும்கிறது..பாரதி தலைப்பாகை.. கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: கற்பனையா வரைஞ்ச ஓவியம், என்ன கலரில் இருந்தால் என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார் எச்.ராஜா!

சின்ன வயசில் இருந்தே, ஏன்.. நமக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்தே.. பாடப்புத்தகத்தில் பாரதியார் படத்தை பிளாக் அண்ட் ஒயிட்டில் பார்த்துதான் நமக்கு பழக்கம். டெக்னாலஜி மாறினாலும் பாரதியார், பாரதியாராகவேதான் இருந்தார்!

H Raja Tweet about Bharathyiar saffron turban Image in Text book

ஆனால் என்னமோ தெரியவில்லை, இந்த வருஷம் கலர்புல்லாக தெரிகிறார். பாடப்புத்தகத்தில் யாரோ ஒருவர் இதை வரைந்துள்ளாராம். தேசிய கொடி போல நினைத்து படத்துக்கு கலர் கொடுத்துவிட்டாராம். தேசிய கொடியில் 3 கலர் இருக்கும்போது, ஒரு கலர் மட்டும் ஏன் எல்லாராலும் பேசப்பட்டு வருகிறது என்று தெரியவில்லை.

இது தற்செயலானது, எதேச்சையானது, உள்நோக்கம் இல்லை என்று பள்ளிக்கல்வி துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் இதை அப்படியே விட்டிருக்கலாம். இதற்கு எச்.ராஜா வந்து கருத்து சொல்லவும்தான் விஷயம் பெரிசோ, அப்படியானால் எல்லாரும் சொல்றதுபோல "அந்த நிறம்" உண்மைதானா? என்றெல்லாம் யோசனை வருகிறது.

இது பற்றி எச்.ராஜா தனது ட்வீட்டில், "பாரதிக்கு தலைப்பாகையே ஓவியர் வரைந்ததுதான் . அவரது இயல்பான புகைப்படம் காரைக்குடி இந்து மனிதாபிமான சங்கத்தில் இன்றும் உள்ளது. கற்பனையாக ஓவியர் வரைந்த தலைப்பாகை எந்த நிறத்தில் இருந்தால் என்ன" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
வாஸ்தவமான கேள்விதான்.. ஆனால் அப்துல்கலாமுக்கும், அம்பேத்கருக்கும் காவி நிறத்தில் சிலை வைத்தது கற்பனை என்றால் இதுவும் முற்றிலும் கற்பனையே!

English summary
BJP H Raja Tweet about Bharathyiar saffron turban Image in Plus two Tamil book design
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X