எச். ராஜா டிவிட்டருக்குள் போய் பார்த்தால்.. சினேகா அழுது கொண்டிருக்கிறார்!
காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்து எச்.ராஜா ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: திடீரென்று எச்.ராஜா ட்விட்டருக்குள் போய் பார்த்தால், அங்கே நடிகை சினேகா அழுது கொண்டிருக்கிறார்! மீம் ஒன்றினை வைத்துதான் ஒரு ட்வீட் போட்டுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா!
அதிமுக-பாஜக நல்லபடியா முடிந்துவிட்டது. எவ்வளவு எதிர்பார்த்தாங்களோ அதுகிடைக்கல, ஆனால் கொடுத்த 5 சீட்டுக்களை வாங்கி கொண்டார்கள்.
இதனால் வலிமை வாய்ந்த கூட்டணி உருவாகிவிட்டதாகவும், திரும்பவும் பாஜக ஆட்சிதான் என்றும் அக்கட்சி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மகிழ்ச்சியுடன் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

நடிகை சினேகா
ஆனால் எச்.ராஜா மட்டும் தன் குஷியை ஒரு படிமேல போய் வேற லெவலில் நின்று.. யோசித்து... சினேகா நடிச்ச ஒரு படத்தின் ஸ்டில்லை வைத்து யாரோ போட்ட ஒரு மீம்மை தேடிப்பிடிச்சி.. கொண்டுவந்து தன் ட்விட்டரில் போட்டுள்ளார். அதில், மனைவி சினேகா கணவரிடம் பேசுவதுபோல டயலாக் இது:

நக்கல் மீம்
கணவன்: ஏண்டி அழற இப்போ?
சினேகா: ஒன்னுமில்லைங்க. 5 வருஷமா அரிசி விலை ஒரே நிலையில இருக்கு. பருப்பு விலை பாதியா குறைஞ்சிடுச்சி.
கணவன்: சரி அதுக்கு என்ன இப்போசினேகா: திரும்பவும் காங்கிரஸ் திமுக ஆட்சிக்கு வந்துட்டாங்கன்னா எல்லாமே விலை ஏறிப்போயிடுமேன்ற பயந்தாங்க" என்று காங்கிரஸை நக்கல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.
|
பெட்ரோல் விலை
பாஜக ஆட்சியின்போது ஏறின பெட்ரோல் விலைக்கு என்ன காரணம், 5 மாநில தேர்தலின்போது குறைந்ததுக்கும் என்ன காரணம் என்று இதுவரை நமக்கு புரியவில்லை.

ஏன் பங்கேற்கவில்லை?
கேஸ் விலை, மருந்து பொருள் விலைகள், ரயில் கட்டண விலை உயர்வுக்கு இந்த 5 வருடமாக காரணம் தெரியாதபோது, அரிசி, பருப்பு விலை எப்போது குறைந்தது என்று நமக்கு குழப்பமாக உள்ளது. ஓகே... அரிசி, பருப்பை விடுங்க.. அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எச்.ராஜா ஏன் கலந்துக்கிடலைன்னு காரணம் என்னன்னு சொல்லுவாரா?
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு!











Click it and Unblock the Notifications