இந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா!
ப சிதம்பரம் போஸ்டர் குறித்து எச்.ராஜா காட்டமாக விமர்சித்துள்ளார்
Recommended Video
சென்னை: இந்த போஸ்டர் எப்படி எச்.ராஜா கண்ணில் பட்டது என்று தெரியவில்லை. எக்கச்சக்கமாக கொதித்து போய் கிடக்கிறார்!
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கட்சியின் மூத்த தலைவர் ஆவார். கட்சி தலைமையுடன் நெருக்கத்தில் உள்ளவர்.. செல்வாக்கை பெற்றிருப்பவர்! இருந்தாலும் தமிழக அளவில் இவரது செல்வாக்கு அவ்வளவு பெரிதாக இல்லை. இதை எம்பி தேர்தல் தோல்வியே பறைசாற்றி உள்ளது.
ஆனால் இவருக்கு ஒரு நிரந்தர எதிரி உண்டென்றால் அது ப.சிதம்பரம்தான். சிதம்பரத்தின் ஊழல்களை புட்டு புட்டு வைத்தவர்.. அவரது குடும்பத்தை ஓயாமல் விமர்சித்தே வந்த நிலையில், இன்று சிதம்பரம் திகாருக்கே சென்றுவிட்டார்.

அப்போதும், அவரது கைது குறித்தும், அவரை போலவே வேறு சிலரும் கைதாவார்கள் என்பது குறித்தும் எச்.ராஜா அடிக்கடி ஆரூடம் சொல்லி வருகிறார். இந்நிலையில், ஒரு போஸ்டர் எச்.ராஜா கண்ணில் பட்டுள்ளது.
அதில் ப.சிதம்பரத்தை கடவுளாக அதாவது கிருஷ்ணரை போல சித்தரித்து காங்கிரஸ்காரர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர். எதற்காக இப்படி ஒட்டினார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை நேற்று சிதம்பரமத்துக்கு பிறந்த நாள் என்பதால் இப்படி ஒட்டியிருக்கலாம் என தெரிகிறது.
ஊழல் குற்றச்சாட்டில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை கிருஷ்ண பரமாத்மா போல் சித்தரித்து காங்கிரஸ் போஸ்டர் ஒட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தை இழிவு படுத்தியதற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். @BJP4TamilNadu @news7tamil @PTTVOnlineNews @News18 pic.twitter.com/1TqXK1S9Bq
— H Raja (@HRajaBJP) September 17, 2019
அந்த போஸ்டரில் கிருஷ்ணர் கெட்-அப்பில் வழக்கமான கண்ணாடி அணிந்து நிற்கிறார் ப.சிதம்பரம். பக்கத்தில் ராகுல், சோனியா காந்தி, போட்டோக்கள் சிறிய அளவிலும், பெரிய அளவில் கார்த்திக் சிதம்பரம் போட்டோவும் உள்ளது. அதில், கல்விக்கடன் வழங்கியும், பயங்கரவாதத்திலிருந்து பாரதத்தை காத்திடும் எங்களின் கடவுளே" பல்லாண்டு வாழ்க" என்று அச்சிடப்பட்டுள்ளது.
இதை பார்த்துதான் எச்.ராஜா டென்ஷன் ஆகியுள்ளார். இந்த போஸ்டரை எடுத்து போட்டு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார் எச்.ராஜா. அதில், "ஊழல் குற்றச்சாட்டில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை கிருஷ்ண பரமாத்மா போல் சித்தரித்து காங்கிரஸ் போஸ்டர் ஒட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தை இழிவு படுத்தியதற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று காட்டமாக கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications