வேற லெவல் ஜாக்பாட்.. "இவங்களுக்கெல்லாம்" சம்பளம்.. மொத்தமாக வரப்போகுது.. தமிழக அரசின் மெகா சர்ப்ரைஸ்
சென்னை: கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களுக்கான குட்நியூஸ் ஒன்றினை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.. இது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7314 கவுரவ விரிவுரையாளர்கள் மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.. கல்லூரிகளின் உதவிப்பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தேவையான தகுதியும், அனுபவமும் இருக்கும் போதிலும், அவர்களுக்கு மாதம் ரூ.20,000 மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

எனினும், கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதிய நிலுவை ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகிக் கொண்டே செல்கிறது.. எனவே, கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை அவர்கள் பணி செய்த மாதத்தின் கடைசி நாளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஒவ்வொரு வருடமும் வலியுறுத்தி வருபவர்களில் முக்கியமானவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆவார்.
டாக்டர் ராமதாஸ்: கடந்த ஜூலை மாதம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்றும், பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் ரூ.20 ஆயிரம் என்ற நிலையை எட்டியது. அதையும் ஆண்டுக்கு ஒரு மாதம் வழங்க மறுப்பதும், மாதக் கணக்கில் நிலுவை வைப்பதும் நியாயமல்ல. தமிழக அரசே கவுரவ விரிவுரையாளர்களின் உழைப்பைச் சுரண்டக் கூடாது என்றெல்லாம் காட்டமாக அறிக்கை மூலம் கேட்டிருந்தார்.
விரிவுரையாளர்கள்: இதுபோலவே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.. "தமிழகத்தில், பெரும்பாலான கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே செயல்படுகின்றன. பல கல்லூரிகளில், பல்வேறு துறைகளில் துறைத் தலைவர்கள் இல்லாததால், அவர்கள் பணிகளையும், கௌரவ விரிவுரையாளர்களே, மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மேற்கொண்டு வருகின்றனர்.
பல கல்லூரிகளில், கற்பித்தல் பணியோடு கல்லூரியில் இருக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்பவர்கள் இவர்கள்தான். ஆனால், இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகச் சொற்பமே.
மானியக்குழு: எனவே, பல்கலைக்கழக மானியக் குழு, கௌரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதை, திமுக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் 5 ஆண்டுகளுக்கு மேல் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், பல்கலை. உறுப்பு கல்லூரியாக இருந்து அரசு கல்லூரியாக மாறிய கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் சம்பளத்தை விடுவிக்க உத்தரவு அளித்துள்ளது...
விடுவிப்பு: அரசு பல்கலை கழகங்களில் உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்ட கல்லூரிகள் நிர்வாகம், நிதி பற்றாக்குறையால் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்துள்ளது. அரசு கல்லூரிகளாக மாறிய நிலையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நிலுவை இருந்து வந்த நிலையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பள பாக்கியை உடனடியாக வழங்க உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
சம்பள பாக்கி இதுநாள்வரையில் நிலுவையில் இருந்தவந்த நிலையில், தற்போது அது விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியாகியிருப்பது, மிகுந்த மகிழ்ச்சியை கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications