தாம்பரம் துள்ளுது.. "லட்சுமிபுரத்தில்" குட் நியூஸ்.. திருநீர்மலை ஹேப்பி.. சென்னை மாநகராட்சி செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை காலத்தை நோக்கி தமிழகம் நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், தாம்பரம் மக்களுக்கு குட்நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது. என்ன அது?

சென்னையை பொறுத்தவரை எப்போது மழை வந்தாலும் பாதிக்கப்பட்ட பகுதியாக புறநகர்கள் உள்ளன.. அதனால்தான், மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக, தாம்பரம் - முடிச்சூர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமுறை எழுந்துள்ளது.

Happy announcement from Chennai Tambaram Corporation and Good news for Tiruneermalai by TWAD

முடிச்சூர் பகுதி: தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையானது, தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம் வரை கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலைகள் சீரமைக்கப்படாததால், தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பெருத்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.. ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிகள், பிறகு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், இவைகள் தவிர மற்ற துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் போன்றவற்றுக்காக சாலைகள் தோண்டப்பட்டு விடுகின்றன.

பெருங்குடியை எடுத்துக்காண்டால், கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் சீராகவே இல்லை. கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள இணைப்பு சாலைகளும் சேறும் சகதியுமாகிவிடுகிறது. அசோக்நகர் சாலை வரை இந்த பிரச்சனை நீடிக்கிறது.

அதனால்தான் மழை காலங்களில் இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கிவிடுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு விடுகிறது..

சாலைப்பணிகள்: இதையெல்லாம் கருத்தில் கொண்டே, சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதில், சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதுபோல தாம்பரம் மாநகராட்சியிலும், மழைக்காலங்களில், மழை வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கமிஷனர் அழகு மீனா அவ்வப்போது அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.

சாலைவசதிகளை போலவே, குடிநீர் வசதியிலும் பெருத்த கவனத்தை தாம்பரம் மாநகராட்சி செலுத்தி வருகிறது.. தற்சமயம், பம்மல் பகுதியில் இருந்து திருநீர்மலை பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல தேவையான பணிகள் ரூ.2 கோடியில் நடந்து கொண்டிருக்கின்றன..

திருநீர்மலை: இந்நிலையில், தாம்பரம் துணை மேயர் காமராஜ் கூடுதல் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.. அதில், "தாம்பரம் மாநகராட்சி திருநீர்மலை பகுதிக்கு இப்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 5 லட்சம் லிட்டா் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனினும், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அதனால், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக மெட்ரோ குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

லட்சுமிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு, பம்மல் பகுதியிலிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

இந்த நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும். இந்த திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளதால், சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

மகிழ்ச்சி: நீர்த்தேக்க குழாய்கள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், லட்சுமிபுரம், நாகப்பா நகா் உள்ளிட்ட 50,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறுவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநகராட்சியின் இந்த தகவலானது, தாம்பரம் பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+