மாறன் பொண்ணை பாருங்க.. வானில் குதித்த காவ்யா.. கால் தரையிலே இல்ல.. சன்ரைசர்ஸ் போட்ட சர்ப்ரைஸ் பந்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலாநிதி மாறனின் மகள், காவ்யா மாறனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?

ஊடகம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி நெட்வொர்க்கின் உரிமையாளரும், பிரபல ஐபிஎல் டீம் சன்-ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சன் குழுமத்தின் உரிமையாளருமான கலாநிதி மாறனின் மகள் காவ்யா.. இவருக்கு 31 வயதாகிறது..

Happy moment IPL Cricket 20-20 match and Kalanithi Maran daughter Kavya Maran Jumps of Joy in Hyderabad Match

ஆர்வம்: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பி.காம் பட்டதாரி.. நியூயார்க் பல்கலைக்கழக ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பட்டம் பெற்றவர். தன்னுடைய அப்பாவின் நிர்வாகத்தில் காவ்யா மாறனின் பங்களிப்பும், பொறுப்பும் மிக அதிகம்.

தமிழ்நாட்டில் அதிக சொத்து உள்ள பெண்மணிகளில் இவரும் ஒருவர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டீமின் சிஇஓ-வாகவும் உள்ளார் காவ்யா.. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஒன்று.. இதுவரை ஒரு முறை கோப்பை வென்றிருக்கிறது இந்த அணி..

ஐபிஎல்: எனவே, எப்போது போட்டி நடந்தாலும், காவ்யா மாறனும் கிரிக்கெட் மைதானத்திற்கு செல்வது வழக்கம்.. ஐபிஎல் ஏலத்தின் போதும்சரி, ஐபிஎல் போட்டிகளின்போதும்சரி, காவ்யா மாறன் பொதுவெளியில் வரும்போது, ரியாக்ஷன்கள் பலரையும் கவனிக்க செய்துவிடும். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு ஐபிஎல் போட்டியின் ஏலத்தின்போதும், முக்கிய முடிவுகளை எடுப்பதில் காவ்யாவுக்கும் நிறைய முக்கியத்துவம் இருந்து வருகிறது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதின.. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி, 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

குதூகலம்:
இதில் கடைசி பந்தை புவனேஷ்வர் குமார் வீசினார்.. அதாவது, தான் வீசிய கடைசி பந்தில் பவலை LBW-வாக்கி அவுட்டாகினார்.. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.. இந்த வெற்றியை பார்த்து காவ்யா மாறன் குதூகலமடைந்தார்..

மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த அணியைவிட, கிரிக்கெட் போட்டியை கேலரியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த காவ்யா, மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தார்.. தன்னுடைய 2 கைகளையும் மேலே உயர்த்தி, 2 கால்களும் தரையிலேயே படாமல், காவ்யா மாறன் எகிறி குதித்த இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஐபிஎல் போட்டியின் 50-வது ஆட்டம் என்பதால், சன்ரைசர்ஸ் அணியின் வெற்றியானது, மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+