புறம்போக்கு நிலம்.. விவசாயிகளுக்கு குஷி.. 100 நாள் வேலை திட்டத்தில் அடுத்த அதிரடி.. இனி நிம்மதி
சென்னை: 100 நாள் வேலை திட்டம் சம்பந்தமாக, முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவின் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலை திட்டம்) இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

100 நாள் வேலை திட்டம்: இந்த திட்டத்தின்கீழ், குளங்களை தூர்வாருவது,கால்வாய்களை பராமரிப்பது, அரசுக்கு சொந்தமான காடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது என பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதேபோல சமீபத்தில் கூட இதில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது..
மேலும், பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூகத் தணிக்கை தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை தெரிவித்திட கட்டணமில்லா தொலைபேசி எண். 18004252152-யை தொடர்புகொள்ளுமாறும், மேலும் இது தொடர்பான மாவட்ட வாரியான குறைதீர்க்கும் அலுவலர்கள் குறித்த விபரங்கள், வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை tnrd.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது..
அதிரடி அறிவிப்பு: அந்தவகையில், ஒருபக்கம் ஊதிய உயர்வு, மறுபக்கம் புகார்களின் மீது நடவடிக்கை என தமிழக அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. இப்போதுகூட, மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளது. அந்த வகையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 5,000 புதிய சிறு குளங்கள், 250 கோடி ரூபாயில் அமைக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அரசு தரப்பில் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.
அதன் விபரம் இதுதான்: "ஒரு கிராம ஊராட்சியில், குறைந்தது ஒரு புதிய குளம் உருவாக்கலாம்.
- நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட குளங்களை உருவாக்கலாம்
- ஏரி மற்றும் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில், புதிய குளம் அமைப்பதாக இருந்தால், அப்பகுதி, 10 ஆண்டுகளுக்கு மேலாக, துார் வாரப்படாத பகுதியாக இருக்க வேண்டும்.
- சமுதாய குளங்களை உருவாக்கலாம். ஆனால், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடாது
மகிழ்ச்சி: - புதிய குளங்களை உருவாக்கும் போது, அவற்றுக்கு தண்ணீர் வருவதற்கு, புதிய கால்வாய்களை அமைக்கலாம்" என்று, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications