தமிழகத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும்.. தொடர்ந்து 4 நாட்களுக்கு: வானிலை மையம் அறிவிப்பு

அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.. இன்று தமிழகம் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, நாளை 26ம் தேதி மற்றும் 27ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த தொடர் 4 நாட்கள் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இது தொடர்பாக உள்ளதாவது:

 4 நாட்கள்

4 நாட்கள்

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் மார்ச் 25-ம்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். வரும் 26, 27, 28-ம் தேதிகளில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 தமிழ்நாடு

தமிழ்நாடு

இதில், இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26ம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.. கடந்த 24 மணிநேரத்தில் கொடைக்கானலில் 8 செ.மீ., ராஜபாளையம், பிளவக்கல் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூர்

ஆம்பூர்

இதனிடையே, தமிழகத்தின் சில மாவட்டங்களில் நேற்றைய தினம் மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நல்ல மழை பெய்திருக்கிறது..கடந்த சில தினங்களாகவே திருப்பத்தூர், ஆம்பூர் பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வந்தது.. அதிலும் நேற்று இந்த வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்த நிலையில், திடீரென அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.. இதனிடையே, தமிழகத்தின் சில மாவட்டங்களில் நேற்றைய தினம் மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நல்ல மழை பெய்திருக்கிறது..கடந்த சில தினங்ளாகவே திருப்பத்தூர், ஆம்பூர் பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வந்தது.. அதிலும் நேற்று இந்த வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்த நிலையில், திடீரென அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது..

 வாணியம்பாடி

வாணியம்பாடி

இதில், வாணியம்பாடி நகர பகுதியில் மட்டும் கன மழை நீடித்ததால், மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சற்று சிரமத்துக்கு ஆளானார்கள்.. அதேபோல, பழனி மற்றும் சுற்றுவட்டாரங்களான ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் ஆகிய பகுதிகளிலும் நேற்று மாலை அரைமணி நேரம் மிதமான மழை பெய்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+