அசத்தலோ அசத்தல்.. பஸ், ரயில், மெட்ரோவுக்கு இனி ஒரு "அட்டை" போதும்.. எப்படி பயன்படுத்துவது தெரியுமா
சென்னை: ஒரே கார்டை ஸ்வைப் செய்து பஸ், மெட்ரோ, லோக்கல் ரயிலில் பயணம் செய்யும் 'சிங்காரஅட்டை' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது... அதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை பயணிகள் எளிமையாக பயணம் மேற்கொள்ள சிங்காரச்சென்னை அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள ப்ளஸ் பாயிண்ட் என்னவென்றால், இனி வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய தேவையே கிடையாது..
பஸ்கள், எலக்ட்ரிக் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஆகிய 3 பயணங்களுக்கும் இந்த ஒரே கார்டை பயன்படுத்த முடியும்.. ஆனால் இந்த திட்டம் இப்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது என்பதால், இப்போதைக்கு இந்த அட்டையை வைத்து மெட்ரோவில் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

சபாஷ் அறிவிப்பு: அடுத்த 2 மாதத்தில் புறநகர் ரயிலில், இது முழுமையாக கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.. புறநகரில் தவிர்த்து சென்னை மாநகரப் பேருந்துகளில் கொண்டு வருவதற்கு இன்னும் 10 மாதங்கள் ஆகும் என்கிறார்கள்.. இந்த 10 மாதத்திற்குள் இதற்கு தேவையான கருவிகளை வாங்கிய பிறகு இந்த அட்டையை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
இந்த அட்டையை ஏப்ரல் 17-2023 முதல் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெறலாம். குறிப்பிட்ட தொகையை ரீசார்ஜ் செய்து அட்டையை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். மெட்ரோவோ, லோக்கல் ரயிலோ அல்லது பேருந்தோ அங்கு பொருத்தப்பட்டிருக்கும் மெஷினில் ஸ்வைப் செய்தால் பயணத்துக்கான கட்டணம் எடுத்துக்கொள்ளபடும். இதற்காக டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் காத்திருக்க தேவையில்லை. கார்டில் உள்ள பணம் காலியானதும் மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

இந்த அட்டையை சென்னை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள எந்த ஒரு மெட்ரோவுக்கும் பயன்படுத்த முடியும்.. இதுபோக,சிங்காரச்சனை அட்டையை டெபிட் கார்டு ஆகவும் பயன்படுத்த முடியும். எஸ்பிஐ வங்கியுடன் கணக்கு வைத்துள்ளார்கள் இதனை டெபிட் கார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம்... இதுதொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கட்டம் 1 (Phase 1) மற்றும் கட்டம் 1 நீட்டிப்பில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியுடன் (வங்கி பங்குதாரர்) இணைந்து சிங்கார சென்னை அட்டையை (National Common Mobility Card-தேசிய பொது இயக்க அட்டை) அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது, சிங்கார சென்னை அட்டைகளை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் எம்.எம்.ஆர்.டி.ஏ மும்பை லைன் 2ஏ&7, பெங்களூரு மெட்ரோ, டெல்லி மெட்ரோ விமான நிலையம், கான்பூர் மெட்ரோ, மும்பை மற்றும் கோவாவில் கடம்பா போக்குவரத்து பேருந்துகள் ஆகிய இடங்களில் ரூபே தேசிய பொது இயக்க அட்டைகளை ஏற்கும் இந்தியாவின் அனைத்து மெட்ரோகளிலும் பயன்படுத்த முடியும்.

சுங்கச்சாவடி: எதிர்காலத்தில், பேருந்து புறநகர் ரயில்வே, சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சிட்டி மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிரிவுகளில் பணம் செலுத்த வாடிக்கையாளர்கள் இந்த ஒற்றை அட்டையைப் பயன்படுத்தலாம். அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடனும் தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரூபே தொழில்நுட்பம் இதன் அடிப்படையாகும்.
இந்த அட்டையை பாரத ஸ்டேட் வங்கி வழங்கும், வாலட் வசதியுடன் சேர்த்து அதிகபட்சமாக 2000 ரூபாய் சேமிக்க முடியும். புதிய அட்டையை பயன்படுத்துவதற்கும் மேலும் அட்டைகளை ரீசார்ஜ் செய்வதற்கும் பிரத்யேக இணையதளத்தை (https://transit.sbi/swift/customerportal?pagename=cmrl) பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ளது. இந்த அட்டைக்கான இருப்புத்தொகையை பணம் மூலமாகவும் ஆன்லைன் வங்கி சேமிப்பு கணக்குகள் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். சிங்கார சென்னை அட்டையின் முக்கிய அம்சங்கள்:
இந்த அட்டை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த அட்டையை இந்தியாவின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தலாம்.
குறைந்தபட்ச KYC உடன் எளிதான பதிவு செயல்முறை.
ராதாகிருஷ்ணன்: பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், சிங்கார சென்னை அட்டையை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வின்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), அர்ஜுனன் (திட்டம்), பிரசன்னகுமார் ஆச்சார்யா (திட்டம்), CUMTA நிறுவனத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார், மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி, NPCI, Paycraft மற்றும் Ford ஆகியவற்றின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
முதற்கட்டமாக, 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் (கோயம்பேடு, சென்ட்ரல், விமான நிலையம், உயர்நீதிமன்றம், ஆலந்தூர், திருமங்கலம், கிண்டி) தேசிய பொது இயக்க அட்டை வழங்கப்படும். தேசிய பொது இயக்க அட்டைகளை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களின் தானியங்கி கட்டண வசூல் அமைப்பு கேட்களிலும் பயன்படுத்தலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications