மாணவர்களுக்கு ஹேப்பி.. 10, 12ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு தடையில்லா மின்சாரம்.. தமிழக மின்வாரியம்
சென்னை: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வு ஆரம்பமாக உள்ளதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், இன்று செய்முறைத் தேர்வுகள் துவங்குகின்றன.

இன்று தேர்வு: இன்று 7ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை இந்த செய்முறை நடக்க உள்ள நிலையில், சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த செய்முறைத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இதற்காக அனைத்து பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுக்கு தேவையான ஆய்வகப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வரும் 14ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்று இந்த தேர்வு துவங்கி உள்ளது..
மின்வாரியம்: இந்த நிலையில், இன்று முதல் செய்முறை தேர்வு தொடங்க இருப்பதை அடுத்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, தமிழக மின்சார வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரத்யேகமாக பிறக்கப்பிட்டுள்ள உத்தரவில், "இன்று முதல் செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம் கிடைக்க வேண்டும் என்றும், மும்முனை இணைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பராமரிப்பு பணிகள்: பராமரிப்பு பணிகளுக்காக ஏப்ரல் 15ஆம் தேதி வரை மின்தடை செய்யக்கூடாது என்றும், மாணவர்கள் படிப்பதற்காக இரவு நேரங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்" என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் நடக்கும். இதையடுத்து, பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு பிளஸ் 2 வகுப்புக்கு மே 9ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மே 19ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மே 19ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications