வையாபுரியை பார்த்ததுமே.. தேனி அதிமுகவில் என்ன நடந்தது.. கோர்ட்டிலேயே எகிறி குதித்த நடிகர்.. அப்ப்பாடா
நடிகர் வையாபுரி தேனி வழக்கில் இருந்து நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார்
சென்னை: 100 ரூபாய்க்காக 8 வருட காலமாக, மனநிம்மதியை இழந்த நடிகர் வையாபுரி, இப்போதுதான் அதில் இருந்து மீண்டு வந்துள்ளார்.. என்ன நடந்தது?
கடந்த 2014-ல் நடந்த சம்பவம் இது.. தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளரான பார்த்திபனை ஆதரித்து அதிமுக பேச்சாளர்கள் தேனி மாவட்டம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டனர்.
அந்தவகையில், போடி பகுதியில் நடிகர்கள் வையாபுரி, தியாகு ஆகியோர் பிரச்சாரம் செய்ய துவங்கினர்.. போடி நகர் 1-வது வார்டு புதூர் பகுதியில் வையாபுரியும் தியாகுவும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, சில பெண்கள் இவர்கள் 2 பேருக்கும் ஆரத்தி எடுத்துள்ளனர்.

நடிகர் தியாகு
பிறகு, தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, நடிகர்கள் கிளம்பி சென்றுவிட்டனர். இந்நிலையில்,தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு நகைச்சுவை நடிகர் வையாபுரி பணம் கொடுத்ததாக, போடி நகர் போலீஸ் நிலையத்தில் போடி பறக்கும்படை பிரிவு தாசில்தார் குணசேகரன் புகார் ஒன்றை அளித்திருந்தார்.. அதில், போடி புதூர் பகுதியில் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தப்பட்டது என்றும், அங்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தட்டில் 100 ரூபாய் பணம் வைத்து வையாபுரி கொடுத்தாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது..

100 ரூபாயா?
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக நடிகர் வையாபுரி மீது போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2014ல் ஆரம்பித்த வழக்கு இது.. ஆரத்தி எடுத்த பெண்களுக்கு வையாபுரி 100 ரூபாய் கொடுத்ததாக கூறி, இதுநாள் வரை விசாரணை நடந்து கொண்டே இருந்தது.. போடி ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய உத்தரவால் வழக்கும் தொடரப்பட்டது. இதற்கிடையில் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பியும் நடிகர் வையாபுரி ஆஜராகாமலேயே இருந்து வந்தார்...

நடிகர் வையாபுரி
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக போடி நீதிமன்றம் வையாபுரிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.. இதன்படி, வையாபுரி போடி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலமாக ஆஜராகி, பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டு சென்னை திரும்பினார்... இந்த வழக்கு விசாரணைக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் வையாபுரி ஆஜரானார்...

ஹப்பாடா + பெருமூச்சு
கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போதுதான், இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. விசாரணையில் வையாபுரியும் பங்குபெற்றார்... இதில் நடிகர் வையாபுரி குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.. விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை கேட்டு, கோர்ட் வளாகத்திலேயே நிம்மதி பெருச்சுமூச்சு விட்டார் வையாபுரி. இதையடுத்து, வையாபுரியின் 8 வருட டென்ஷன் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
-
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம்












Click it and Unblock the Notifications