Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கி ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஹேப்பி நியூஸ்.. மொத்தமாக பணம் கொட்டப்போகுது.. அதுவும் இவ்வளவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கி ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் வந்துள்ளது. நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு, வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள்.

Happy news for bank employees: will be receiving a 17 percent increase in salary

இந்நிலையில் இந்தியன் வங்கி சங்கம் (ஐபிஏ) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் இடையே 12வது ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை முடிவில், பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. நவம்பர் 1, 2022 முதல் அமலுக்கு வரும் இந்த ஊதிய உயர்வு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இதன்படி வங்கி ஊழியர்கள் சம்பளத்தில் 17 சதவீதம் கூடுதலாக பெறுவார்கள்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC) பொதுச் செயலாளர் ரூபம் ராய் இந்த தகவலை தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், இறுதி ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1986 முதல் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் அதிகம் பெற வழிவகுக்கும் என்றார். இந்த ஒப்பந்தத்தால் வங்கிகளுக்கு 7988 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த கோரிக்கை ஏற்கப்படுமா இல்லை நிராகரிக்கப்படுமா என்பது தெரியவில்லை..

ஊழியர்கள் பற்றாக்குறை: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. 100 கோடி வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் சேவை செய்து வருகின்றன. அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமங்களில் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

வங்கி சேவை தான் இந்தியாவின் உயிர்நாடியாக உள்ள நிலையில் வங்கிகளில் போதிய ஊழியர்கள் நியமிக்கப்படாததால், பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதோடு, வாடிக்கையாளர்களுக்கும் உரிய சேவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

வங்கிகளில் ஆண்டுதோறும் கிளார்க் பணியிடங்கள் குறைந்து கொண்டே வரும் நிலையில், 2024-25-ம் ஆண்டில் 5 வங்கிகளுக்கு மொத்த 4,045 கிளார்க் பணியிடங்களுக்கு மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப அந்த வங்கிகள் தரப்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+