கேஸ் சிலிண்டர் இருக்கட்டும்.. பைப்லைன் பதித்து.. வீட்டில் குழாயில் பாயபோகும் இயற்கை எரிவாயு.. ஹேப்பி
சென்னை: தமிழகத்தில் பைப் லைன் மூலம் வீடுகளுக்கு கேஸ் வழங்கும் திட்டம் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. அந்தவகையில், 466 கிமீ தூரத்திற்கு குழாய்கள் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான பணிகளும் நடந்து வருவதாகவும் 4 நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணியை, "டோரண்ட் கேஸ்" நிறுவனம் மேற்கொள்ள போவழத உட்பட இதுகுறித்து கூடுதல் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன..
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இறக்குமதி செலவுகளை குறைக்கவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டினை அதிகப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அதன்ஒருபகுதியாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர் துறைமுகத்தில் எல்என்ஜி எனப்படும் திரவ நிலை எரிவாயு முனையத்தை அமைத்திருக்கிறது.

இயற்கை எரிவாயு
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் குழாய் வழித்தடம் மூலம் இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்வதற்காக சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் வரியாக குழாய் வழித்தடம் அமைத்து வருகிறது.
அதாவது, அயல் நாடுகளிலிருந்து கப்பல்களில் திரவ நிலையில் எரிவாயு, இந்த முனையத்துக்கு கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குழாய் வழித்தடம் மூலம் எரிவாயு கொண்டு செல்வதற்காகவே இந்த குழாய் வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது.. 1.61 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணிகளை மேற்கொள்வதற்காகவே, 7 நிறுவனங்களுக்கு ஆரம்பத்தில் மத்திய அரசு அனுமதி தந்திருந்தது அனைவரும் அறிந்த செய்தியே.
முதல்கட்ட பணிகள்
இந்நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கினறன.. அதாவது, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கவும், குழாய் மூலமாக வீடுகளுக்கு இயற்கை எரிவாய்வு வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி தந்துள்ள நிலையில், 9 மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதலும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.. அந்தவகையில், சென்னை, திருவள்ளூர், நாகை மாவட்டத்தில் முதல்கட்டமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை குழாய்கள் அமைக்கும் பணி
இதில் சென்னையை பொறுத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, சேப்பாக்கம், ராயபுரம், தண்டையார் பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய இடங்களில் குழாய் அமைக்கும் பணிக்கு தமிழக கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி தந்துள்ளது.. அந்தவகையில் 466 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் அமைக்கப்பட உள்ளன.
இதில் 360 கிலோ மீட்டர் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய பகுதிகளில் வருவதால், அதற்கான அனுமதி மட்டுமே தற்போது வழங்கப்பட்டு , 48 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.. இதன் பணிகளும் விரையில் துவங்கப்பட உள்ளதாம்.
அதுமட்டுமல்ல, வாகனங்களுக்கு சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, வீடுகளுக்கு பிஎன்ஜி எனப்படும், "பைப்டு நேச்சுரல் கேஸ்" என்ற பெயரில் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயுவாக வினியோகம் செய்யப்படுகிறது.
சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன்
வரும், 2030க்குள், 2.30 கோடி வீடுகளுக்கும், 2,785 சிஎன்ஜி மையங்கள் வாயிலாக வாகனங்களுக்கும் எரிவாயு வினியோகிக்க வேண்டும். இந்த பணிக்கு மாநிலம் முழுதும், "சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன்" எனப்படும், 7 மின் கேஸ் வினியோக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னையில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணியை, "டோரண்ட் கேஸ்" நிறுவனம் மேற்கொள்ள போகிறதாம்.. 5,000 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 33 லட்சம் வீடுகளுக்கும், 222 சி.என்.ஜி., மையங்கள் வாயிலாக வாகனங்களுக்கும் எரிவாயு வினியோகிக்க வேண்டும். இதற்காக, சென்னை முழுவதும் குழாய் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
கடலில் இருந்து, 500 மீட்டருக்கு வெளியில் உள்ள பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை குழுமத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், சென்னையில் கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளில் குழாய் வழித்தடம் அமைப்பதற்காக கடலோர மண்டல மேலாண்மை குழுமத்திடம் அனுமதி கோரப்பட்டது.
விரைவில் பணிகள் துவக்கம்
அதன்படியே, கடற்கரைக்கு அருகில், 280 கி.மீ. தூரம் குழாய் வழித்தடம் அமைக்க, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. எனவே, எண்ணுார், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், பாரிமுனை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, திருவான்மியூர் வரை குழாய் வழித்தடம் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது. இதனால், சென்னை முழுதும் பரவலாக, குழாய் வழியாக இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய முடியும் என்கிறார்கள்.
-
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications