2 "லட்டு" திமுகவுக்கு.. ஸ்டாலின் வெச்ச குறி தப்புமா.. உதறலில் "தலைகள்".. எடப்பாடிக்கு சிக்கல்?
திமுகவுக்கு 2 சாதகமான விஷயங்கள் நடக்க போவதாக கூறப்படுகிறது
சென்னை: தேர்தல் இன்னும் நடக்காத நிலையில் 2 விதமான குஷியில் திமுக தத்தளித்து வருகிறது.. இதையடுத்து அதிமுக கூடாரம் தன்னுடைய வெற்றியை நிலைநாட்டி கொள்ள, களத்தில் உச்சக்கட்ட தீவிரத்தை கையில் எடுத்துள்ளது.
நடக்க போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக, அதிமுக 2 கட்சிகளுமே மிக முக்கியமானதுதான்.. இதில் முதல்முறையாக தனித்து போட்டியிடும் அதிமுகவுக்கு கவுரவ பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான், கடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்தோம் என்று வெளிப்படையாகவே சிவி சண்முகம் உள்ளிட்டோர் பேசி வந்த நிலையில், தனித்து போட்டியிட்டு பெரும்பான்மையை வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.

சசிகலா
இதற்காக பெரிதும் நம்பிக் கொண்டிருப்பது, திமுக மீதான விமர்சன பிரச்சாரத்தை மட்டுமே.. 8 மாத காலமாகவே அதிமுகவினர் பெரும் சோதனைகளை அனுபவித்து வருகின்றனர்... உட்கட்சி பூசல் ஒருபக்கம், கோர்ட் கேஸ்கள், ரெய்டுகள் மறுபக்கம், இதற்கு நடுவில் சசிகலாவின் விஸ்வரூபம், எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவை சமாளிக்க முடியாமல் திணறி போனது என நாலாபக்கமும் இடியாப்ப சிக்கலில் அதிமுக மாட்டிக் கொண்டது.

பொங்கல் பரிசு
அதனால் கடந்த கால சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேட்பதைவிட, திமுகவை விமர்சித்தும் குறை சொல்லியும் ஓட்டை வாங்கிவிடலாம் என்றே கணக்கு போட்டது.. இதில், பொங்கல் பரிசு பொருட்கள் வினியோகத்தில் நடந்த குளறுபடி அதிமுக தரப்பை ஓரளவு உற்சாகப்படுத்தியும் வருகிறது.. அதிலும் 500 கோடி ரூபாய் அளவிற்கு திமுக முறைகேடு செய்துள்ளதாக, எடப்பாடி பழனிசாமி கொளுத்தி போட, அந்த விவகாரம் கோர்ட் வரை சென்றுவிட்டது.. இதுவே அதிமுகவின் பிரதான பிரச்சாரமாக ஒலிக்கிறது..

நீட் தேர்வு
என்றாலும், நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை போன்றவற்றில் திமுக மக்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக பிரச்சாரங்களில் தெறிக்க விட்டு வருவதும், தங்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் என்று கணக்கு போட்டு வைத்துள்ளது... மேலும், மற்ற இடங்களைவிட, சேலம் மாவட்ட மேயர் போஸ்ட்டிங்கை மட்டுமாவது கைப்பற்றிவிட வேண்டும், இல்லாமல் தன்னுடைய இமேஜூக்கு டேமேஜ் ஏற்படுத்திவிடும் என்றும் எடப்பாடி தரப்பின் ஒரே நோக்கமாக உள்ளது.

குஷியில் திமுக
திமுகவை பொறுத்தவரை செம குஷியில் உள்ளது.. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என எது நடந்தாலும் ஆளும் கட்சியே வெல்லும் என்பது பொதுவான நியதி.. இப்போது திமுகவுக்கு அந்த தெம்பு நிறையவே உள்ளது என்றாலும் 2 விஷயங்கள் மேலும் நம்பிக்கையை தந்துள்ளதாம்.. முதலாவதாக, வேட்பு மனு தாக்கல் விஷயத்திலேயே இதற்கான அறிகுறி தெரிந்துவிட்டதாம். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் அறிவிக்கப்பட்டிருந்தது இல்லையா?

அதிமுக
அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனு செய்தவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் தங்கள் அளித்த வேட்பு மனுவை திரும்பப் பெற்று கொண்டுள்ளனர்.. குறிப்பாக திமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்ட அதிமுகவினரின் உள்ளிட்ட பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கு எதிரான வேட்புமனுக்களை சுயேச்சைகள் உள்ளிட்டோர் திரும்ப பெற்றுவிட்டதால், போட்டியின்றி தேர்வு சூழல் உருவாகி விட்டது..

மகிழ்ச்சி
இது கணிசமான வெற்றியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.. அப்போதே திமுகவினர் இதை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.. தேர்தல் நடப்பதற்கு முன்பேயே திமுகவுக்கு இது புது தெம்பை ஏற்படுத்திவிட்டது.. ஆனால், இதில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான நிலையில், இவர்களுக்கான பதவி விஷயத்தில் அதிருப்தியோ, கருத்து வேறுபாடோ ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என்று இப்போதே கணிக்கப்பட்டு வருகிறது.

பாசிட்டிவ்
அடுத்ததாக, நகரப்பகுதிகளில் திமுகவுக்கு பாசிட்டிவ் தகவல்கள் நிறைய வந்து கொண்டிருக்கிறதாம்... காரணம், கடந்த சட்டசபை தேர்தலின்போது, இதே நகரப்பகுதிகள் தான் திமுகவுக்கு பெரிதும் கைகொடுத்தது... இதை மனதில் வைத்தே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 75 சதவீத இடங்களை கைப்பற்றி விடலாம் என்று திமுக மேலிடம் யோசித்தது.. இதுபோக, ஆட்சிக்கு வந்து, ஆவின் பால் விலை குறைப்பு, ரேஷனில் இலவச மளிகை தொகுப்பு, 4,000 ரூபாய் ரொக்கம், பெண்களுக்கு இலவச அரசு பஸ் பயணம் போன்றவை பிரச்சாரங்களில் ஒலிக்க விட்டதும் கூடுதல் பலனை பெற்று தரும் என்று நம்புகிறது.

சாட்டை
அதனால்தான் திமுக மாவட்ட செயலர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசும்போதெல்லாம் "75 சதவீத இடங்கள் நிச்சயம், 85 சதவீத இடங்கள் லட்சியம்" என்று சொல்லி, அதற்கேற்றவாறு தேர்தல் பணிகளை செய்யும்படி உத்தரவிட்டு வருகிறாராம்.. அதுமட்டுமல்ல, தோல்வி அடையும் இடங்களில் நிர்வாகிகள் மாற்றப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது...

கறுப்பு ஆடுகள்
கடந்த சட்டசபை தேர்தலின்போது கறுப்பு ஆடுகள் யார் யார் என்ற லிஸ்ட் தலைமைக்கு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் இந்த முறை நிச்சயம் ஸ்டாலின் களையெடுப்பை நடத்திவிடுவார் என்கிறார்கள்.. அதனால்தான் திமுகவின் வெற்றிக்கு, அமைச்சர்கள் உட்பட மா.செ.க்கள், நிர்வாகிகள் என மொத்த பேரும் முழுவீச்சில் களமிறங்கிவிட்டனராம்..!

துணை பிரச்சனைகள்
அதேசமயம், மக்களிடம் பரவலான லேசான அதிருப்தி திமுக மீது உள்ளதாகவும் களநிலவரம் தெரிவிக்கின்றன.. குறிப்பாக, பொதுமக்களின் பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் தனி பிரிவின் மெத்தப்போக்கை காட்டி வருவதாக கூறப்படுகிறது.. இதைதவிர, மின் கட்டண கணக்கீட்டு முறையை மாதம் ஒருமுறையென இன்னமும் மாற்றாதது கவலையை அதிகரித்து விட்டதாம்.. நீட் உள்ளிட்ட பிரதான பிரச்சனைகள் இருந்தாலும், இதுபோன்ற வேறு சில பிரச்சனைகள்தான், திமுகவை சறுக்கலில் கொண்டு போய்விட்டு விடும் என்ற கலக்கமும் திமுகவிடம் ஏற்பட்டுள்ளதாம்.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications